செண்பகத்தோப்பு அணை மறுசீரமைப்பு செய்ய கோரி ஆர்ப்பாட்டம்

87
திருவண்ணாமலை மாவட்டத்திலுள்ள படைவீடு பகுதியில் அமைந்துள்ள செண்பகத்தோப்பு அணை தமிழக அரசால் 12 வருடங்களுக்கு முன் 34 கோடி ரூபாயில் கட்டப்பட்டது பல கோடி ரூபாய் ஊழல் நடந்துள்ளது இதுநாள் வரை அந்த அணை விவசாயிகளின்  பயன்பாட்டிற்கு கொண்டு வரவில்லை 30 கிராம விவசாயிகளின் வாழ்வாதாரம் 46 ஏரியின் நீர் பாசன பிரச்சனையை மறுசீரமைப்பு செய்ய தமிழக அரசு 9.8 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்து இது நாள்வரை அணை சீரமைக்கப்படாமல் இருக்கிறது இதனை கண்டித்து நாம் தமிழர் கட்சி திருவண்ணாமலை வடக்கு மாவட்டம் சார்பில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் 12 11 2018 திங்களன்று மாலை 3 மணியளவில் போளூர் அண்ணா பூங்கா எதிரில்
திருவண்ணாமலை வடக்கு மாவட்ட தலைவர் கந்தன் தலைமையில் மாநில இளைஞர் பாசறை ஒருங்கிணைப்பாளர் தமிழ்ச்செல்வன் மற்றும் திருவண்ணாமலை மாவட்ட பொறுப்பாளர்கள் உறுப்பினர்கள் கலந்துகொண்டு ஆர்ப்பாட்டத்தை நடத்தினர்
முந்தைய செய்திகழிவுநீர் கால்வாய் சீர் செய்ய மனு-காஞ்சிபுரம் தொகுதி
அடுத்த செய்திகஜா புயல் பேரழிவின் பாதிப்பிலிருந்து மீண்டுவர உறவுகள் கைகோர்ப்போம்! – சீமான் கோரிக்கை