அரசு மருத்துவமனை சீரமைக்க கோரி மனு-கோவில்பட்டி தொகுதி

38
கோவில்பட்டி அரசு தலைமை மருத்துவமனைக்கு தேசிய தரச்சான்றிதழ் பெறுவதற்கான டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் இருந்து தேசிய தரச் சான்று வழங்கும் ஆய்வு குழு இன்று.  (12/11/2018) திங்கட்கிழமை கோவில்பட்டி மருத்துவமனை வந்தது.
10.11.18 அன்று  அடிப்படை வசதியற்று நோயாளிகளுக்கு போதுமான தண்ணீர் வழங்க இயலாத மருத்துவமனையை கண்டித்து  நாம் தமிழர் கட்சி நகர் முழுவதும் சுவரொட்டி ஒட்டியது.
காலை 11 மணியளவில் தேசிய தரச்சான்று ஆய்வு அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்ட பொழுது நாம் தமிழர் கட்சி பொறுப்பாளர்கள் அந்த ஆய்வு குழு அதிகாரிகளை முற்றுகையிட்டு கோரிக்கைமனு அளித்தனர்.
அதிகாரிகளும் நாம் தமிழர் கட்சியின் கோரிக்கைகளை ஏற்று விரைவில் தண்ணீர் உள்ளிட்ட அடிப்படை வசதிகளை செய்து தர நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்தனர்.