வனக்காவலன்! எல்லைக்காத்த மாவீரன் ஐயா வீரப்பனார் அவர்களின் 14ஆம் ஆண்டு நினைவு நாளான 18-10-2018 வியாழக்கிழமை காலை 11 மணியளவில் நாம் தமிழர் கட்சி சேலம் மாவட்டம் சார்பாக மேட்டூர் அருகில் மூலக்காடு கிராமத்தில் உள்ள ஐயா வீரப்பனாரின் உடல் அடக்கம் செய்யப்பட்ட இடத்தில் மலர்வணக்கமும் வீரவணக்கமும் செலுத்தப்பட்டது.
இந்நிகழ்வில் சேலம் மாவட்ட நாம் தமிழர் கட்சியின் அனைத்துநிலைப் பொறுப்பாளர்களும் உறுப்பினர்களும் பெருந்திரளாகப் பங்கேற்றனர்