நாம் தமிழர் கட்சி-சுற்றுசூழல் பாசறை-பனை விதை நாடும் விழா-திருப்பூர் வடக்கு தொகுதி

139

07/10/2018 திருப்பூர் வடக்கு மாநகர் மாவட்டம் (திருப்பூர் வடக்கு சட்டமன்ற தொகுதி ) சுற்றுசூழல் பாசறை சார்பில் 1000 பனைவிதைகள் நடும் விழா சிறப்பாக நடைபெற்றது.இந்நிகழ்விற்கு மாவட்ட தலைவர் ப.கௌரிசங்கர் அவர்கள் தலைமை தாங்கி நிகழ்வை தொடங்கிவைத்தார். மேலும் இந்த நிகழ்வை மாவட்ட செயலாளர் பழ.சிவக்குமார் அவர்கள் முன்னிலையில் 75க்கும் மேற்பட்ட நாம்தமிழர் உறவுகள் மற்றும் அனைத்து பாசறை பொறுப்பாளர்களும் கலந்துகொண்டு திருப்பூர் சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள கிராம குளங்கள் மற்றும் ஏரிகளில் பனைவிதைகள் நடப்பட்டது.மேலும் இந்த நிகழ்வில் கிராம பொதுமக்கள் தாங்களாகவே முன்வந்து விழாவில் கலந்து கொண்டு சிறப்பித்தனர்

முந்தைய செய்திவள்ளலார் புகழ் வணக்க பொதுக்கூட்டம்-கீழ்ப்பெண்ணாத்தூர் தொகுதி
அடுத்த செய்திபல கோடி பனை திட்டம்-மடத்துக்குளம் சட்ட மன்ற தொகுதி