தியாக தீபம் திலீபன் நினைவேந்தல்-மடத்துக்குளம் தொகுதி

29

தியாக தீபம் திலீபன் நினைவேந்தல் நமது உடுமலை – மடத்துக்குளம் கட்சி தலைமையகமான நம்மாழ்வார் குடிலில் மாவட்ட இணைச் செயலாளர் உடுமலை பாபு (எ) பாரி பைந்தமிழன் தலைமையில் நடைபெற்றது!

நிகழ்வில்

தியாக தீபம் திலீபன் உருவப்படத்திற்கு மாவட்ட மருத்துவ பாசறை செயலாளர் அபு. இக்பால் ஈகைச்சுடர் ஏற்றி வீரவணக்கம் செலுத்தினார்!

மடத்துக்குளம் தொகுதி தலைவர் ஈசுவரசாமி, இணைச்செயலாளர் உத்திரமூர்த்தி,
செய்தித்தொடர்பாளர் அன்வர்தீன், வடக்கு ஒன்றிய செயலாளர் திலீபன்,

உடுமலை தொகுதி துணைச்செயலாளர் ஈசுவரன், உடுமலை நகர
ச்செயலாளர் ருத்ரமூர்த்தி அலுவலக பொருப்பாளர் ராசேசுகுமார் ஆகியோர் தியாகதீபம் திலீபன் அண்ணனின் புகைப்படத்திற்கு மலர்தூவி வீரவணக்கம் செலுத்தினர்!

தியாகதீபம் திலீபன் அண்ணனின் நினைவு நாளில் நாம் தமிழர் கட்சி மருத்துவ பாசறை சார்பில் குருதிக்கொடை பிரிவு துவங்கப்பட்டது!
இதில் முதல் கட்டமாக நிகழ்வில் பங்கேற்ற அனைவரும் தங்களின் குருதி வகை பதிவு செய்து இணைத்துக்கொண்டனர்!!

விரைவில் இக்குருதிக்கொடை பிரிவை விரிவுபடுத்தி தகவல்களை உடுமலை – மடத்துக்குளம் அரசு மருத்துவமனைக்கு மக்கள் பயன்பாட்டிற்காக அனுப்பிவைக்கப்படும் என முடிவெடுத்தனர் !!