கொடியேற்றம்-மரம் நடுதல்-புதுமண தம்பதி-திருவரங்கம் தொகுதி

39

திருவரங்கம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட யாகப்புடையான் பட்டி எனும் ஊரைச்சேர்ந்த நாம் தமிழர் கட்சியின் அடிப்படை உறுப்பினரான இளங்கலை பட்டதாரி திரு. ஆ. சிரஞ்சீவி அவர்கள் இல்லற வாழ்வில் அடியெடுத்து வைக்கும் மண நாளின்  அன்றே இன மீட்சிக்கு வித்திடும் நாம் தமிழர் கட்சியின் அடையாளமான கொடியினை தனது ஊரில் ஏற்றினார்
21.10.2018 அன்று யாகப்புடையான்பட்டியில்  இல்லற வாழ்க்கையை துவங்கிய திரு. ஆ. சிரஞ்சீவி அவர்கள் திருமணம் முடிந்தவுடன் தனது துணைவியார் திருவாட்டி சி.ஜெய்சியாவுடன் நாம் தமிழர் கட்சியின் கொடியினை தங்களின் கரங்களால் எடுத்துக்கொடுக்க, திருச்சிராப்பள்ளி மண்டலச் செயலாளர் திரு. சேது. மனோகரன் அவர்களால் கொடியேற்றப்பட்டுள்ளது, கொடியேற்றிய கையுடன் எதிர்கால சந்ததியினரின் நல்வாழ்விற்காக மரக்கன்றுகள் நட்டனர்
இனம் காக்க விளைந்த மணமக்கள், நலமுடன் பல்லாண்டு வாழ வாழ்த்துகிறோம்.