50 ஆண்டுகாலம் நாடகத்துறையில் தனி முத்திரையுடன் தடம்பதித்த ஐயா முத்துசாமி அவர்கள் நாடகம் மட்டுமல்லாது சிறுகதை எழுத்தாளராகவும் பரிணமித்தவர். அவர் பெற்ற பல உயரிய விருதுகள் அவரின் நீண்டகாலக் கலை இலக்கியப் பங்களிப்பிற்குச் சாட்சியாக இருக்கிறது. தனது அமைப்பின் மூலம் மிகச்சிறந்தத் தமிழ்க் கலைஞர்களை வார்த்தெடுத்த ஐயாவின் பணி என்றும் நினைவுகூறத்தக்கது.
நம் மண் சார்ந்த ஈடில்லா படைப்பாளியைத் தமிழகம் இழந்திருக்கிறது. கூத்தை நவீன வடிவத்திற்குக் கொண்டுவந்து அதை அடுத்தத் தலைமுறைக்கு அவர் கடத்தியதைப் போல் அடுத்ததடுத்தத் தலைமுறைக்குக் கூத்துக்கலையைக் கொண்டு செல்வதே அவருக்கு நாம் செய்யும் புகழ் வணக்கமாக இருக்கும்.
ஐயாவை இழந்து வாடும் அவரது குடும்பத்தினர் மற்றும் கூத்துப்பட்டறைக் கலைஞர்கள் துயரத்தில் நானும் பங்கேற்கிறேன்.
– சீமான்
தலைமை ஒருங்கிணைப்பாளர்
நாம் தமிழர் கட்சி