கழிவுநீர் கால்வாய் சீரமைப்பு பணி-காஞ்சிபுரம் தொகுதி-நாம் தமிழர் கட்சி

19

காஞ்சிபுரம் தொகுதி வடக்கு நகரம் , தேரடி தெரு ,  தர்கா சந்து. கால்வாய் குழாயில் ஏற்பட்டுள்ள அடைப்பு மற்றும் விரிசல் காரணத்தால் கழிவுநீரானது கால்வாயிலிருந்து வெளியேறி சாலை முழுவதும் தேங்கிய வண்ணம் இருந்தது
இதனால் அங்கு வசிக்கும் மக்கள் பல்வேறு இன்னல்களுக்கு உள்ளாகினர். இதனை பலமுறை நகராட்சி அலுவலகத்தில் அப்பகுதி மக்கள் சொல்லியும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை இதை சரி செய்யும் விதமாக 26.9.18 அன்று  நகராட்சி அலுவலகத்தில் *நாம் தமிழர் கட்சியின்* சார்பாக மனு ஒன்று அளிக்கப்பட்டது. இந்த மனுவை ஏற்றுக்கொண்ட நகராட்சி ஆணையர் , நகராட்சி ஊழியர்களை அனுப்பி தற்காலிகமாக கால்வாய் அடைப்பை சரி செய்தார்.