ஏழு தமிழர் விடுதலையை வலியுறுத்தி மாபெரும் ஆர்ப்பாட்டம் – தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு

33

கட்சி செய்திகள்: ஏழு தமிழர் விடுதலையை வலியுறுத்தி தமிழ்த்தேசியப் பேரியக்கத் தலைவர்  பெ.மணியரசன் தலைமையில் மாபெரும் ஆர்ப்பாட்டம் – சென்னை (வள்ளுவர்கோட்டம்) | நாம் தமிழர் கட்சி மற்றும் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு

சிறைக்கொட்டடியில் கால்நூற்றாண்டுகளாக வதைப்பட்டிருக்கும் நமது உறவுகள் பேரறிவாளன், சாந்தன், முருகன், நளினி, இராபர்ட் பயாஸ், ஜெயக்குமார், இரவிச்சந்திரன் ஆகிய ஏழு அப்பாவி தமிழர்களின் விடுதலையை வலியுறுத்தி நாம் தமிழர் கட்சி மற்றும் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் சார்பாக, தமிழ்த்தேசியப் பேரியக்கத் தலைவர் பெ.மணியரசன் தலைமையில் இன்று 21-09-2018, வெள்ளிக்கிழமை, மாலை 03 மணியளவில் சென்னை, வள்ளுவர் கோட்டத்தில் மாபெரும் ஆர்ப்பாட்டம்நடைபெற்றது.

இந்த ஆர்ப்பாட்டத்தில் நாம் தமிழர் கட்சியின் மாநில ஒருங்கிணைப்பாளர்கள் ‘சட்டத்தரணி’ சந்திரசேகரன், அன்புத்தென்னரசன், இராவணன், களஞ்சியம் சிவக்குமார், ஆன்றோர் அவையம் ஒருங்கிணைப்பாளர் புலவர் மறத்தமிழ்வேந்தன், மாநில இளைஞர் பாசறை ஒருங்கிணைப்பாளர்கள்  ஜெகதீசப் பாண்டியன், வழக்கறிஞர் இராஜீவ்காந்தி, மகேந்திரன், ஆசைத்தம்பி, மகளிர் பாசறை ஒருங்கிணைப்பாளர்கள் அமுதா நம்பி, சீதாலட்சுமி, சுமித்ரா,  கலை,இலக்கியப் பண்பாட்டு பாசறை ஒருங்கிணைப்பாளர் நடிகர் மன்சூர்அலிகான், மாநில செய்திப்பிரிவு செயலாளர் பாக்கியராசன், தலைமை நிலையச் செயலாளர் செந்தில்குமார், மதுரை  தென் மண்டலச் செயலாளர் வெற்றிக்குமரன்,  காஞ்சி தென்மண்டல செயலாளர் சஞ்சீவிநாதன், ஆனந்த் மாரியப்பன், ஆவடி நல்லதம்பி, மதுரவாயல் ஆனந்த், பாலு, மாநில மாணவர் பாசறை ஒருங்கிணைப்பாளர்கள் இடும்பாவனம் கார்த்திக், சார்திராஜா உள்ளிட்ட பொறுப்பாளர்கள் மற்றும் பொதுமக்கள் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கூடி எழுவர் விடுதலையை தமிழக அரசும், ஆளுநரும் உடனடியாக நிறைவேற்ற வலியுறுத்தி முழக்கங்களை எழுப்பினர்.

ஆர்ப்பாட்ட நிகழ்வினை ஆயிரம் விளக்கு தொகுதி தலைவர் விஜயகுமார், துணைத்தலைவர்கள் கிறிஸ்டி ஜான்சன், இரவிக்குமார்  செயலாளர் பாபு, இணைச்செயலாளர்  பிரபாகரன், துணைச்செயலாளர் சுரேஷ்,  பொருளாளர் ஜலில் அன்சாரி, செய்தித் தொடர்பாளர் பூபாலன் உள்ளிட்ட பொறுப்பாளர்கள் ஒருங்கிணைத்தனர்.

முன்னதாக நேற்று (20-09-2018) மறைந்த முதுபெரும் தமிழறிஞர் கி.த.பச்சையப்பனாரின் திருவுருவப்படத்திற்கு மாலை அணிவித்து  புகழ்வணக்கம் செலுத்தப்பட்டது.

கோரிக்கை உரையாற்றியவர்கள்:

  • அ.வினோத், ஆதித்தமிழர் விடுதலை இயக்கம்
  • கே.எம்.செரிப், தமிழக மக்கள் ஜனநாயகக் கட்சி
  • ஆ.கி.சோசப் கென்னடி, தமிழர் தேசிய விடுதலைக் கழகம்
  • மு.களஞ்சியம், தமிழர் நலப் பேரியக்கம்
  • செ.முத்துபாண்டியன், மருது மக்கள் இயக்கம்
  • செந்தமிழன் சீமான், நாம் தமிழர் கட்சி


தலைமை அலுவலகச் செய்திக்குறிப்பு
நாம் தமிழர் கட்சி

முந்தைய செய்திசுற்றறிக்கை: ஒரே நாளில் ஒரு இலட்சம் பனை விதைகளை நடுதல் விழா | சுற்றுச்சூழல் பாசறை
அடுத்த செய்திபெரம்பலூர் மாவட்டச் செயலாளர் நியமனம் – தலைமை அறிவிப்பு