வீரப்பெரும்பாட்டன் தீரன் சின்னமலை 213ஆம் ஆண்டு நினைவுநாள் – மலர்வணக்க நிகழ்வு-ஓடாநிலை-ஈரோடு

143

03-08-2018 வீரப்பெரும்பாட்டன் தீரன் சின்னமலை 213ஆம் ஆண்டு நினைவுநாள் – மலர்வணக்க நிகழ்வு

தமிழ்த் தேசிய இனத்தின் வீரத்தையும் மானத்தையும் உலகத்தாரைத் திரும்பி பார்க்கவைத்த நம் வீரப்பெரும்பாட்டன்!
வெள்ளைய ஏகாதிபத்தியத்திடம் அடிமைப்பட்டுக்கிடந்த தன் அன்னைத் தமிழ்ச் சமூகத்தை விடுவிக்க வீரப்போர் புரிந்த புரட்சியாளன்!
அடிமைப்பட்டுக்கிடந்த தன் இனத்தின் மக்களை அடிமைத் தளை அறுத்து விடுதலைக் காற்றைச் சுவாசிக்க வைத்த மான மறவன்!
நமது வீரப்பெரும்பாட்டன் தீரன் சின்னமலையின் 213ஆம் ஆண்டு நினைவுநாளையொட்டி 03-08-2018 வெள்ளிக்கிழமை மாலை 3மணியளவில் ஓடாநிலையில் திருப்பூர்,கரூர்,கோவை,நீலகிரி,நாமக்கல் உறவுகளோடு ஈரோடு மாவட்ட ஒருங்கிணைப்பாளர் லோகுபிரகாசு தலைமையில் மாநில இளைஞர் பாசறை ஒருங்கிணைப்பாளர் கல்யாணசுந்தரம் முன்னிலையில் தீரன் சின்னமலைக்கு மாலை அணிவித்து மலர்வணக்கம்  செலுத்தப்பட்டது