மாம்பாளையம் அரசு பள்ளியில் மாணவர்களுக்கு மரக்கன்று வழங்கல் மற்றும் சுற்றுச்சூழல் விழிப்புணர்வு | வனம் செய்வோம்

311

சூலை 31 அன்று மாலை 3.00 மணியிலிருந்து 4.45 மணி வரை நாமக்கல் மாவட்டம், மாம்பாளையம் அரசு உயர் நிலைப்பள்ளியில் உள்ள ‘தேசிய பசுமை படை’ ஆசிரியர் பத்மாவதி மற்றும் பொறுப்பு தலைமை ஆசிரியர் ஐயா.அன்பழகன் ஆகியோரின் ஒப்புதல் பெற்று நாம் தமிழர் கட்சியின் சுற்றுச்சூழற் பாசறையின் வனம் செய்வோம் குழுவினர் மாணவர்களுக்கு மரக்கன்று வழங்கல் மற்றும் சுற்றுச்சூழல் விழிப்புணர்வு ஏற்படுத்தும் நிகழ்வை முன்னெடுத்தனர்.

மாணவர்களுக்கு மரக்கன்றுகள் வழங்கி மரம் வளர்க்க வேண்டியதின் அவசியத்தையும் நெகிழிகளை ஒழிப்பது குறித்தும் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. விதை வங்கி என்ற அமைப்பை பள்ளியில் தொடங்கி அதற்க்கு மாணர்களையே பொருப்பாளர்களாக நியமித்து பனை விதைகளை சேகரித்து தருமாறு நாம் கோரிக்கை வைத்தோம்.ஆசிரியர்கள் அதை வரவேற்று விதை வங்கியை உருவாக்க உறுதியளித்தனர்.

ஆண்டின் இறுதியில் அதிக பனை விதைகளை சேகரித்த மாணவர்களுக்கு பரிசு வழங்க திட்டமிட்டுள்ளோம்.

நிகழ்வுக்கு பள்ளிப்பாளையம் காவல் துறை ஆய்வாளர் திரு.பாலமுருகன் அவர்கள் வனம் செய்வோம் குழுவினரின் அழைப்பை ஏற்று தலைமை வகித்து சிறப்பித்தார்.

இந்த பள்ளி பல ஒழுங்கு நடவடிக்கைகள் மற்றும் சுற்று சூழற் பணிகளை தங்கள் பள்ளியில் சிறப்பாக செய்துவருகிறது. இனி நாம் அவர்களுக்கு பக்கபலமாக இருப்போம்.

செய்தி: வருண், மாவட்ட ஒருங்கிணைப்பாளர், சுற்றுச்சூழல் பாசறை, நாமக்கல் மாவட்டம்.

வனம் செய்வோம்! வளம் மீட்போம்! உயிர் காப்போம்! – நாம் தமிழரின் சுற்றுச்சூழல் பாசறை!
தமிழர் நிலங்களில் களவுபோகும் நம் வளங்களை மீட்டெடுக்கும் முயற்சியில் நாம் தமிழரின் மற்றுமோர் மைல்கல்!

தமிழரின் வனவளத்தை மீட்கும் இப்போரின் வியூகங்கள்,
• சுற்றுச்சூழல் தூய்மைப்பணி மற்றும் மாசுக் கட்டுப்பாடு.
• நெகிழி ஒழிப்பு.
• ஏரி குளங்களை அந்த அந்த ஊர் மக்களோடு இணைந்து தூர்வாறுதல்.
• கருவேலம் அகற்றல்.
• வனம் – ‘பறவைகளும் இயற்கையும் ஒப்பந்தம் செய்து உருவாக்கிய பெரும் வளம், உயிர்களின் பிறப்பிடம், மனிதனின் பேராசையால் அழிந்து கொண்டிருக்கும் வளங்களில் முதலிடம். அதனை மீட்கும் பொருட்டு நாட்டு வகை மற்றும் அழிந்து கொண்டிருக்கும் மரத்தின் விதைகள் சேகரித்தல் மேலும் மழை காலத்திற்கு முன் நம் நாட்டு மரங்களின் விதைகளை விதைத்து நம்மை ஈன்றெடுத்த தமிழ் மண்ணை குளிர்விக்கப் போகிறோம்.

தமிழகத்தின், தமிழ்தேசியத்தின் வரலாற்றுப் பக்கத்தில், “சொல்லுக்கு முன் செயல்” என்பதை அழுத்தமாக மீண்டும் ஒருமுறை நாம் தமிழர் பிள்ளைகள் எழுதப் போகிறோம்.

“மனிதர்கள் இல்லாமல் மரங்கள் வாழும்;
மரங்கள் இல்லாமல் மனிதர்கள் வாழவே முடியாது! வனம் செய்வோம்!” – சீமான்

முந்தைய செய்திசுற்றுசூழற் பாசறை சார்பாக பாரூர் ஏரியைச் சுற்றி பனை விதைக்கும் பணி
அடுத்த செய்திவீரப்பெரும்பாட்டன் தீரன் சின்னமலை 213ஆம் ஆண்டு நினைவுநாள் – மலர்வணக்க நிகழ்வு-ஓடாநிலை-ஈரோடு