அமராவதி ஆற்றுப்படுகையைத் தூர்வாரிய சுற்றுச்சூழல் பாசறையினர் 13 பேர் மீது வழக்கு

33

கட்சி செய்திகள்: அமராவதி ஆற்றுப்படுகையைத் தூர்வாரிய சுற்றுச்சூழல் பாசறையினர் 13 பேர் மீது வழக்கு | நாம் தமிழர் கட்சி

நெகிழிகள், குப்பைகள், கருவேலமரப் புதர்கள் மண்டிக்கிடக்கும் கரூர், அமராவதி ஆற்றுப்படுகையைத் தூர்வாரக்கோரி பலமுறை மனு கொடுக்கப்பட்டும் நடவடிக்கை எடுக்கப்படாததால் நாம் தமிழர் கட்சியின் சுற்றுச்சூழல் பாசறையினர் பொக்லைன் இயந்திரம் கொண்டு தூர்வாரும் பணியில் ஈடுபட்டபோது அங்கு வந்த காவல்துறை மற்றும் பொதுப்பணித்துறையினர் தூய்மைப்பணியில் ஈடுப்பட்டிருந்த ஒரு பெண் உட்பட 13 உறவுகளையும் கைது செய்து அவர்கள் மீது 147,148,353,506(ii)Ipc உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் பொய் வழக்குகள் பதிந்து சிறைப்படுத்துவதற்காக நீதிபதி முன் நேர் நிறுத்தப்பட்டபோது இவ்வழக்கில் சிறைப்படுத்தவேண்டிய அவசியம் இல்லை என்று காவல்துறையினரின் கோரிக்கையை தள்ளுபடி செய்து உத்தரவிட்டதின் பேரில் உறவுகள் அனைவரும் விடுதலை செய்யப்பட்டனர்.

மேலும், அரசும் பொதுப்பணித்துறையினரும் செய்யவேண்டிய வேலையை பொதுமக்களே செய்துள்ளனர் இதற்காக கடும் சட்டப்பிரிவுகளின் கீழ் சிறைப்படுத்துவதா என்று நீதிபதி கண்டனம் தெரிவித்துள்ளார்.

வழக்கு பதியப்பட்டுள்ளவர்களின் விவரம்

1. சு. இரமேசு
2. செல்வ நன்மாறன்
3. ப.கார்த்திக்
4. லோகேஸ்.
5. பாபு
6. மதுபாலா
7. மாவடியான்
8. து.பாபு
9. சரவணன்
10. மோகன்
11. சசிகுமார்
12. கோபி
13. குழந்தைவேல்

உறவுகள் அனைவரையும் வழக்கிலிருந்து முழுமையாக மீட்க வழக்கறிஞர் பாசறை குழு துரிதமாக செயற்பட்டு வருகிறது.

தலைமை அலுவலகச் செய்திக்குறிப்பு

நாம் தமிழர் கட்சி