சேலம் 8 வழிச்சாலைத் திட்டத்தை எதிர்த்து போராடி சிறைசென்ற 37 நாம் தமிழர் உறவுகள் விடுதலை

6

நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அவர்கள் சேலத்தில் 8 வழிச்சாலைத் திட்டத்தால் பாதிக்கப்பட்ட மக்களைச் சந்தித்தபோது பொய் வழக்கில் கைது செய்யப்பட்டதைக் கண்டித்தும் சேலம் 8 வழிச்சாலைத் திட்டத்தை எதிர்த்தும் ஆர்ப்பாட்டம் நடத்தி கைதான மாநில ஒருங்கிணைப்பாளர் அன்புத்தென்னரசன், வழக்கறிஞர் இரா.கோகுலகிருஷ்ணன் உள்ளிட்ட அம்பத்தூர் மற்றும் திருவொற்றியூர் தொகுதிகளைச் சேர்ந்த 37 உறவுகள் புழல் சிறையில் இருந்து இன்று 24-07-2018 காலை 10 மணியளவில் பிணையில் வெளிவந்தனர்.

காணொளி: https://youtu.be/wT_Qx8FojAw