சுற்றுச்சூழல் பாசறை முன்னெடுத்த மருதமலையை தூய்மைபடுத்தும் உழவாரப்பணி – வீரத்தமிழர் முன்னணி

29

வீரத்தமிழர் முன்னணி மற்றும் நாம் தமிழர் கட்சி சுற்றுச்சூழல் பாசறை முன்னெடுத்த மருதமலையை தூய்மைபடுத்தும் உழவாரப்பணி, தமிழ்பணியும் சைவ பணியும் செய்து வரும் மணிவாசகர் மன்றத்தை சேர்ந்த ஒன்பது ஓதுவார்கள் பங்கு கொண்டு திருமுறை முழுங்க தொடங்கப்பட்டு நாம் தமிழர் கட்சி யின் மாநில மாவட்ட மற்றும் பகுதி உறவுகள் இரநூறு க்கும் மேற்பட்டோரின் பங்கேற்போடு மிகச் சிறப்போடு நடைபெற்றது.

தூய்மை படுத்தும் பணியோடு மக்களுக்கு நெகிழி பற்றிய விழிப்புணர்வு பரப்புரை செய்யப்பட்டு துணிப்பைகள் வழங்கப்பட்டன, நிகழ்வின் ஒரு பகுதியாக மரக்கன்று நடப்பட்டது,

இந்த உழவாரப்பணி இனி தமிழ்நாடு முழுவதும் முன்னெடுக்கபடும்,

பங்கேற்ற வீரத்தமிழர் முன்னணி நாம் தமிழர் கட்சி சுற்றுச்சூழல் பாசறை உள்ளிட்ட அனைத்து பாசறை உறவுகளுக்கும், தூய்மை படுத்தும் கருவிகள், பண உதவி மற்றும் உணவு கொடுத்த உறவுகள் அனைவருக்கும் வீரத்தமிழர் முன்னணி சார்பாக நன்றிகள் தெரிவிக்கப்பட்டது