காவிரி உரிமைக்காகப் போராடி குண்டர் சட்டத்தில் கைதான இடும்பாவனம் கார்த்திக் விடுதலை | நாம் தமிழர் கட்சி
காவிரி நதிநீர் உரிமைக்காகத் தமிழகமெங்கும் போராட்டங்கள் நடைபெற்றுக்கொண்டிருந்த வேளையில் தமிழக தலைநகர் சென்னையில் நடைபெற்றுவந்த ஐபிஎல் கிரிக்கெட் போட்டிகள் மக்களைப் திசைதிருப்புவதாக அமைந்ததால், காவிரி மேலாண்மை வாரியம் அமைத்திடும் வரை தமிழகத்தில் ஐபிஎல் போட்டிகள் நடத்தாமல் வேறு மாநிலங்களுக்கு இடமாற்றம் செய்துகொள்ளுங்கள் என்று பல்வேறு தரப்பிலிருந்து கோரிக்கை வைக்கப்பட்டும் தொடர்ச்சியாக ஐபிஎல் போட்டிகள் நடைப்பெற்றதால் கடந்த ஏப்ரல் 10 ஆம் தேதி நடைபெற்ற ஐபிஎல் முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபட்டதால் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் மீது கொலை முயற்சி வழக்குத் தொடரப்பட்டது. மேலும் கட்சியைச் சேர்ந்த பலர் கைது செய்யப்பட்டு பிணையில் வெளிவந்துவிட்டனர். அதே வழக்கில் நாம் தமிழர் கட்சியின் மாநில மாணவர் பாசறை ஒருங்கிணைப்பாளர் இடும்பாவனம் கார்த்திக் அவர்கள் கடந்த மே-18 அன்று சென்னை, பெருங்குடியில் நடைபெற்ற மாபெரும் இன எழுச்சிப் பொதுக்கூட்டத்தில் பங்கேற்று உரையாற்றிவிட்டு இரவு அலுவலகம் திரும்புகையில் காவலர்களால் கைது செய்யப்பட்டு பின்னர் குண்டர் சட்டத் தடுப்புக் காவலில் அடைக்கப்பட்டார். கடந்த சூலை 04 அன்று சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள அறிவுரைக் கழகத்தில் நீதிபதிகள் அமர்வில் நேர் நிறுத்தப்பட்டு சூலை 14 அன்று குண்டர் சட்டம் இரத்து செய்யப்பட்டதாக தீர்ப்பு வழங்கப்பட்ட நிலையில், இன்று 24-07-2018 காலை 11 மணியளவில் புழல் சிறையிலிருந்து பிணையில் விடுதலையாகினார்.
அப்பொழுது நாம் தமிழர் உறவுகள் அனைவரும் பெருந்திரளாகக் கூடி பறையிசையுடன் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.
காணொளி: https://www.youtube.com/watch?v=iF7OznnFFsU
—
தலைமை அலுவலகச் செய்திக்குறிப்பு
நாம் தமிழர் கட்சி
+044 – 4380 4084