ஈழத் தமிழர்களுக்கு நீதி வேண்டி பன்னாட்டு வழக்கறிஞர்கள் மாநாடு – சீமான் பங்கேற்பு

33

ஈழத் தமிழர்களுக்கு நீதி வேண்டி பன்னாட்டு வழக்கறிஞர்கள் மாநாடு – சென்னை | சீமான் பங்கேற்பு | நாம் தமிழர் கட்சி

ஈழத்தமிழர் ஆதரவு வழக்கறிஞர்கள் கூட்டமைப்பு மற்றும் அனைத்துலக ஈழத்தமிழர் உரிமை மையம் இணைந்து நடத்தும் ஈழத் தமிழர்களுக்கு நீதி வேண்டி பன்னாட்டு வழக்கறிஞர்கள் மாநாடு, ஓய்வுபெற்ற சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி து.அரிபரந்தாமன் தலைமையில் இன்று 09-06-2018 பிற்பகல் 2 மணியளவில் சென்னை, தியாகராய நகர், ஜி.என்.செட்டி சாலையில் அமைந்துள்ள சர் பிட்டி. தியாகராய அரங்கத்தில் நடைபெற்றது. இதில் பல்வேறு இயக்கங்கள் மற்றும் கட்சிகளைச் சேர்ந்த பிரதிநிதிகள் பங்கேற்றனர். நாம் தமிழர் கட்சி சார்பாக தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அவர்கள் பங்கேற்றார்.


தலைமை அலுவலகச் செய்திக்குறிப்பு
நாம் தமிழர் கட்சி