உறுப்பினர் சேர்க்கை முகாம் மற்றும் தெருமுனைக்கூட்டம் – ஓசூர் (மத்திகிரி ஒன்றியம்)

31

கட்சி செய்திகள்: உறுப்பினர் சேர்க்கை முகாம் மற்றும் தெருமுனைக்கூட்டம் – ஓசூர் (மத்திகிரி ஒன்றியம்) | நாம் தமிழர் கட்சி

25/03/2018 ஞாயிற்றுக்கிழமை காலை முதல் மாலை வரை கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் தொகுதிக்குட்பட்ட நாம் தமிழர் கட்சி – மத்திகிரி ஒன்றியத்தின் சார்பாக உறுப்பினர் சேர்க்கை முகாம் நடைபெற்றது. முகாம் பொறுப்பாளர்களாக ஓசூர் தொகுதித் தலைவர் திரு.சோக்கிம் மற்றும் இணையதள பிரதிநிதி திரு.மணிமாறன் ஆகியோர் பணியாற்றினர். இருபதிற்கும் மேற்பட்ட புதிய உறவுகள் தங்களை நாம் தமிழராக இணைத்துக் கொண்டனர்.

நாம் தமிழர் கட்சியின் கொள்கைகள் தாங்கிய 1000 துண்டறிக்கைகளை அப்பகுதிவாழ் மக்களிடம் நாம் தமிழர் உறவுகள் சேர்ப்பித்தனர்.

கொள்கை விளக்கத் தெருமுனைக்கூட்டம்:

மேலும் மத்திகிரி பேருந்து நிலையத்தில் மாலை 5 மணி முதல் இரவு 9 மணிவரை கொள்கை விளக்கத் தெருமுனைக்கூட்டம் நடைபெற்றது:

விழிப்புணர்வு நாடகம்:
நாம் தமிழர் கட்சி – ஓசூர் தொகுதி: கலை, இலக்கிய, பண்பாட்டுப் பாசறை உறவுகள் திரு.தேவேந்திரன், திரு. ஆறுமுகம்.

அகவணக்கம், வீரவணக்கம், உறுதிமொழி:
திரு. இராமமூர்த்தி.(ஓசூர் தொகுதி – இளைஞர் பாசறை செயலாளர்)

வரவேற்புரை மற்றும் நிகழ்ச்சித் தொகுப்பு:
திரு. சோக்கிம்.(ஓசூர் தொகுதித் தலைவர்)

சிறப்புரை:
திரு. தமிழ்ச்செல்வன். (ஓசூர் தொகுதிச் செயலாளர்)
திரு. மாது.(ஓசூர் தொகுதி – வீரத்தமிழர் முன்னணி செயலாளர்)

எழுச்சியுரை:
திரு. சமுத்திரம் யுவராச்.(மாநில இளைஞர் பாசறை)

நன்றியுரை:
திரு. செகதீசு.(ஓசூர் செய்தித் தொடர்பாளர்)

காலை முதல் இரவு வரையிலான நிகழ்வினை வெற்றிகரமாக திட்டமிட்டு ஓசூர் மாவட்ட பொறுப்பாளர்கள் மற்றும் மத்திகிரி ஒன்றிய பொறுப்பாளர்கள் சிறப்பாக நடத்தி முடித்தனர்.

செய்திக்குறிப்பு:
செகதீசு மணிராசு,