அய்யா வைகுண்டர் நிறுவிய தலைமைப்பதியைக் காக்க மாபெரும் அறவழி உண்ணாநிலை போராட்டம் – சீமான் பங்கேற்பு

580

அய்யா வைகுண்டர் நிறுவிய தலைமைப்பதியைக் காக்க மாபெரும் அறவழி உண்ணாநிலை போராட்டம் – சீமான் பங்கேற்பு | நாம் தமிழர் கட்சி

கன்னியாகுமரி மாவட்டம் சாமித்தோப்பில் அய்யா வைகுண்டரின் தலைமை பதி உள்ளது. கடந்த மார்ச் 4–ந்தேதி இங்கு அய்யா வைகுண்டர் அவதார தின விழா நடைபெற்றது.

இந்த விழாவில் இந்து அறநிலையத்துறை அதிகாரி தலையிட்டதைக் கண்டித்தும், அய்யாவழி மக்களின் உரிமையை பாதுகாக்க வலியுறுத்தியும் நேற்று 18-03-2018 காலையில் சாமிதோப்பு தலைமை பதி முன்புள்ள கலையரங்கத்தில் அறவழி உண்ணாநிலைப் போராட்டம் நடைபெற்றது. பாலபிரஜாபதி அடிகளார் தலைமை தாங்கினார்.

சாமித்தோப்பு பதி நிர்வாகிகள் பால ஜனாதிபதி, பாலலோகாதிபதி, பையன் ஆனந்த், அய்யா வைகுண்டர் அறநிலைய பரிபாலன அறக்கட்டளை நிர்வாகி ராஜன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

நாம் தமிழர்கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் செய்தியாளர்களிடம் பேசுகையில், “அய்யா வைகுண்டர் வழிபாட்டுத் தலத்தை இந்து அறநிலையத்துறை கையகப்படுத்த முயற்சிப்பது அர்த்தமற்றது. நாடெங்கும் கிராமங்கள் தோறும் குலதெய்வங்கள் உள்ளன, அவற்றை எடுப்பார்களா?. எந்த கோயிலுக்கும் அனுமதி இல்லை என்று சொல்லப்பட்ட காலத்தில், அந்த கோயில்களுக்குச் செல்ல வேண்டாம் என்று கூறி தனி வழிபாட்டை ஏற்படுத்தி எதிர்புரட்சி ஏற்படுத்தியவர் அய்யா. அரசு எடுத்துக்கொண்டால் அந்த தத்துவத்தை சாகடித்து விடுவார்கள். அய்யா வழி பதியை எடுக்கலாம் என நீங்கள் கனவிலும் நினைத்துப் பார்க்கக் கூ டாது.

முந்தைய செய்திசுற்றறிக்கை: திருவள்ளூர், வேலூர், தருமபுரி மற்றும் கிருஷ்ணகிரி மாவட்டப் பொறுப்பாளர்களுக்கான சந்திப்புகள் ஒத்திவைக்கப்படுகின்றன
அடுத்த செய்திமுனைவர் ம.நடராசன் அவர்களின் மறைவானது தமிழ்ச்சமூகத்திற்குப் பேரிழப்பு! – சீமான் இரங்கல்