தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலை அமைப்பதை எதிர்த்து தொடர் பட்டினி போராட்டம் – 300 பேர் கைது

55

தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலை அமைப்பதை எதிர்த்து 500க்கும் மேற்பட்ட பொதுமக்கள் மற்றும் நாம் தமிழர் கட்சியினர் இணைந்து வி.வி.டி சிக்னல் அருகில் நேற்று 12-02-2018 காலை 10 மணியிலிருந்து தொடர் பட்டினிப் போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர். இந்நிலையில் இன்று காலை 11 மணிக்கு காவல்துறையினர் போராட்டத்தில் ஈடுபட்டவர்களைக் களைந்து போக செய்தனர். அதையும் மீறி தொடர் போராட்டத்தில் ஈடுபட்ட பெண்கள், குழந்தைகள் உள்பட 300 பேர் கைதுசெய்து மண்டபத்தில் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.

இதுவரை பெண்கள், குழந்தைகள் யாருக்கும் சரியாக உணவு, தண்ணீர் வழங்கப்படவில்லை. நாம் தமிழர் கட்சி பொருப்பாளர்கள் வேல்ராஜ் மற்றும் ஆல்பர்ட் உட்பட 14 பேர் மீது பொய் வழக்கு போடப்பட்டு கைது செய்யப்பட்டுள்ளனர்.