தமிழாற்றுப்படை – மறைமலையடிகள் பற்றி கவிப்பேரரசு வைரமுத்து கட்டுரை அரங்கேற்றம் | சீமான் பங்கேற்பு

32

தமிழாற்றுப்படை – மறைமலையடிகள் பற்றி கவிப்பேரரசு வைரமுத்து கட்டுரை அரங்கேற்றம் | சீமான் பங்கேற்பு

தமிழாற்றுப்படை என்ற வரிசையில் தமிழின் மூவாயிரம் ஆண்டு ஆளுமைகளைப் புதிய தலைமுறைக்கு அறிமுகம் செய்யும் நோக்கத்தோடு கவிப்பேரரசு வைரமுத்து கட்டுரைகள் எழுதி அரங்கேற்றம் செய்து வருகிறார். இதுவரை திருவள்ளுவர், இளங்கோவடிகள், கம்பர், அப்பர், திருமூலர், வள்ளலார், உ.வே.சா, பாரதியார், பாரதிதாசன், புதுமைப்பித்தன், கண்ணதாசன், பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் குறித்த கட்டுரைகளை அரங்கேற்றியிருக்கிறார்.

‘தமிழை ஆண்டாள்’ என்ற தலைப்பில் ஆண்டாள் குறித்து 13-ம் கட்டுரையை அரங்கேற்றிய கவிப்பேரரசு வைரமுத்து, 14-ம் ஆளுமையாக, தனித்தமிழ் இயக்கம் கண்ட ஐயா மறைமலையடிகள் பற்றி எழுதிய கட்டுரையை அரங்கேற்றுகிறார். பிப்ரவரி 13-ந் தேதி (13-02-2018 செவ்வாய்க்கிழமை) மாலை 6 மணியளவில் சென்னை தேனாம்பேட்டை காமராசர் அரங்கத்தில் விழா நடைபெற்றது. ஏற்பாடு: வெற்றித் தமிழர்பேரவை

இவ்விழாவில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் பங்கேற்று நிகழ்வை ரசித்தார்.


தலைமை அலுவலகச் செய்திக்குறிப்பு
நாம் தமிழர் கட்சி