ஷரிஅத் பாதுகாப்புப் பேரவையின் மாபெரும் கண்டனப் பொதுக்கூட்டம் – சீமான் கண்டனவுரை

38

ஷரிஅத் பாதுகாப்புப் பேரவையின் மாபெரும் கண்டனப் பொதுக்கூட்டம் – சீமான் கண்டனவுரை | நாம் தமிழர் கட்சி

இஸ்லாமிய தனியார் சட்டத்தைப் பாதுகாக்க அனைத்து இஸ்லாமிய இயக்கங்கள், பல்வேறு கட்சிகள் பங்கேற்ற மாபெரும் கண்டனப் பொதுக்கூட்டம் 22-12-2017 வெள்ளிக்கிழமை அன்று மாலை 4 மணியளவில் சென்னை, மண்ணடியில் நடைபெற்றது. இதில் நாம் தமிழர் கட்சி சார்பாக தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அவர்கள் பங்கேற்று கண்டனவுரையாற்றினார்.

சீமான் பேசியதாவது,
https://www.youtube.com/watch?v=9JBB8RFHJtg
இந்தியா என்பது பன்முகத்தன்மை கொண்ட ஒரு நாடு; இது பல்வேறு தேசங்களின் ஒன்றியம். அதனையுணர்ந்து அந்தந்த மக்களின் அடையாளங்களுக்கு முக்கியத்துவம் அளிக்காவிட்டால் இந்தியாவின் இறையாண்மை கேள்விக்குறியாகிவிடும்.
இந்துக்களின் திருமணமே இங்கு வெவ்வேறு மாதிரிதான் நடக்கிறது. கிruத்துவர்களிலும் அப்படித்தான் வெவ்வேறு முறைகளில் திருமணம் செய்துகொள்கிறார்கள். அதனை ஒரே மாதிரி செய்யச்சொல்லி நாம் வற்புறுத்த முடியாது. அதேபோல, இசுலாத்தில் நபிகள் வகுத்துத் தந்த வழியில் குரான் காட்டிய நெறியில் அவர்களது வாழ்வியல் முறை அமைத்துக் கொள்ளப்படுகிறது. அம்முறை இந்தியா உருவாவதற்கு முன்பிருந்தே பின்பற்றப்பட்டு வருகிறது. அதில் நாம் தலையிட்டு மாற்ற முடியாது. ஒரு ஆணும், பெண்ணும் மணவாழ்க்கையில் இணைவது போல பிரிவதற்கும் அவர்களுக்கு உரிமையிருக்கிறது. ஒரே தடவையில் மூன்று முறை தலாக் சொல்வதை இங்கு யாரும் ஏற்கவில்லை; அம்முறையும் நடைமுறையில் இல்லை.

ஒருமுறை தலாக் சொன்னால் அவர்கள் இருவரும் ஒரே வீட்டில் 45 நாட்கள் இணைந்து வாழ வேண்டும் என்கிற நடைமுறை இருக்கிறது. இதற்கிடையே இருவருக்கும் மனவொற்றுமை ஏற்பட்டு வாழ விரும்பினால் அவர்களை வாழ அனுமதிக்கிறார்கள். ஒருவேளை, அப்படியும் மனக்கசப்பு நீங்காவிட்டால் மேலும் 45 நாட்கள் நீட்டிக்கப்படுகிறது. நீதிமன்றத்திற்கு மணமுறிவு கோரி சென்றால்கூட அங்கும் ஆறுமாத காலம் அவகாசம் கொடுக்கப்பட்டு வருகிறது. அதனைத்தான் இங்கு ஷரிஅத் சட்டமும் சொல்கிறது. இதிலென்ன பிழையிருக்கிறது?

சபாநாயகர் பதவிக்கு வருபவர்கள் கட்சி சார்பற்றவர்களாக இருக்க வேண்டும் என்கிற மரபு இருக்கும்போது, மதச்சார்பற்ற நாட்டின் தலைவராக வருபவர் மதச்சார்பற்றவராக இருக்க வேண்டாமா? அவ்வாறு மோடி இருக்க மறுப்பதேன்? உடையும், உணவுப்பழக்க வழக்கமுமே ஒரே மாதிரியாக இல்லாத நாட்டில் ஒரே மாதிரியான சட்டம் எவ்வாறு கொண்டு வர இயலும்? சீக்கியர்கள் தலைப்பாகையோடும், தாடியோடும் இராணுவத்தில் இருக்கிறார்களே அவர்களுக்கு இருக்கும் விதிவிலக்கை நீக்கிவிடுவார்களா? ஆகையினால், உயிரைக் கொடுத்தேனும் நம் உரிமைகளைக் காக்க உறுதிபூணுவோம்.

குஜராத்தின் முதல்வராக இருந்தபோது பல்லாயிரக்கணக்கான இசுலாமிய மக்களைக் கொன்ற மோடிக்கு இப்போது என்ன அவர்கள் மீது திடீர் பாசம் வருகிறது? கர்ப்பிணி இசுலாமியப் பெண்ணின் வயிற்றைக் கிழித்து சிசுவை நெருப்பில் பொசுக்கிக் கொன்றவர்களுக்கு இப்போது மட்டும் இசுலாமிய பெண்களின் நலன்கள் மீது அக்கறை எங்கிருந்து வந்தது? சொந்த மாநில மக்களையே அகதிகள் முகாம்களுக்குள் அடைத்து வைத்திருந்தது குறித்துக் கேட்டதற்கு, ‘அங்கு மனித உற்பத்தி நன்றாகத்தான் நடந்து கொண்டிருக்கிறது என்று பேசியவருக்கு, ‘வேகமாகச் சென்று கொண்டிருக்கும் வாகனத்தில் ஓர் நாய் விழுந்து இறந்தால் எப்படி இருக்குமோ அப்படி இருக்கிறது என குஜராத் படுகொலையை வர்ணித்தவருக்கு இப்போது எங்கள் வீட்டுப்பெண்கள் நலன் குறித்து என்ன அக்கறை? என்று சீமான் கேள்வியெழுப்பினார். 

முந்தைய செய்திபெருந்தமிழர் கக்கன் 36ஆம் ஆண்டு நினைவுநாள் – மலர்வணக்க நிகழ்வு
அடுத்த செய்தி24-12-2017 போற்றுதற்குரிய நம் வழிகாட்டி ஐயா பெரியார் 44ஆம் ஆண்டு நினைவுநாள்: புகழ் வணக்கம்