சுற்றறிக்கை: ஆர்.கே. நகர் இடைத்தேர்தல்: மாபெரும் பரப்புரை பொதுக்கூட்டம் – தண்டையார்பேட்டை

142

சுற்றறிக்கை: ஆர்.கே. நகர் இடைத்தேர்தல்: மாபெரும் பரப்புரை பொதுக்கூட்டம் – 01 | நாம் தமிழர் கட்சி

வருகின்ற டிசம்பர் 21ஆம் நாள் நடைபெறவிருக்கும் ஆர்.கே நகர் இடைதேர்தலில் நாம் தமிழர் கட்சி சார்பில் வேட்பாளராக மாநில ஒருங்கிணைப்பாளர் கா.கலைக்கோட்டுதயம் அவர்கள் மெழுகுவர்த்திகள் சின்னத்தில் போட்டியிடுகிறார்கள். இதனையொட்டி கடந்த 01-12-2017 முதல் நமது கட்சியின் தேர்தல் பரப்புரைப் பணிகள் முழுவீச்சில் தொடங்கி நடைபெற்றுவருகிறது. இந்நிலையில் நாளை 08-12-2017 (வெள்ளிக்கிழமை) மாலை 5 மணிக்கு தண்டையார்பேட்டை வைத்தியநாதன் மேம்பாலம் அருகில் மாபெரும் தேர்தல் பரப்புரை பொதுக்கூட்டம் நடைபெறவிருக்கிறது.

இதில் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அவர்கள் எழுச்சியுரையாற்றுகிறார்.

அவ்வயம் மாநில, மண்டல, மாவட்ட, வட்ட, நகர, ஒன்றிய, பகுதி, கிளை நிர்வாகிகள் மற்றும் இளைஞர், மகளிர், மாணவர், வீரத்தமிழர் முன்னணி, மருத்துவர், குருதிக்கொடை, வழக்கறிஞர், உழவர், தொழிலாளர், மீனவர், சுற்றுச்சூழல் பாதுகாப்பு, கையூட்டு-ஊழல் ஒழிப்பு, மழலையர் உள்ளிட்ட அனைத்து பாசறைகளின் பொறுப்பாளர்களும் உறுப்பினர்களும் தவறாமல் பங்கேற்குமாறு கேட்டுக்கொள்கிறோம்.

நாள்: 08-12-2017 (வெள்ளிக்கிழமை)
நேரம்: மாலை 05 மணிக்கு
இடம்: 38வது வட்டம், வைத்தியநாதன் மேம்பாலம் அருகில், தண்டையார்பேட்டை
38வது வட்டப் பொறுப்பாளர்கள்: ஜெகன் 9600079168 / கௌரி சங்கர் 9841064107

வேலூர், கிருஷ்ணகிரி, தருமபுரி மற்றும் திருவண்ணாமலை மாவட்ட பொறுப்பாளர்கள் மற்றும் உறுப்பினர்கள் பொதுகூட்ட ஏற்பாடுகளுக்கான பணிகளில் இடைத்தேர்தல் பணிக்குழுவோடு இணைந்து செயல்படுமாயின் அன்புரிமையுடன் கேட்டுக்கொள்கிறோம்.


கு.செந்தில்குமார்
தலைமை நிலையச் செயலாளர்
பேச: +91-9600709263

முந்தைய செய்திஆர்.கே நகர் தேர்தல்: 06-12-2017 ஆறாம் நாள் | வாக்கு சேகரிப்பு மற்றும் தெருமுனைக்கூட்டம்
அடுத்த செய்திஅறிவிப்பு: ஆர்.கே நகர் இடைத்தேர்தல்: 08-12-2017 எட்டாம் நாள் பரப்புரைத் திட்டம்