ஆர்.கே நகர் தேர்தல்களம்: 10-12-2017 10வது நாள் | சீமான் வாக்கு சேகரிப்பு மற்றும் பொதுக்கூட்டம்

75

செய்தி: ஆர்.கே நகர் தேர்தல்: 09-12-2017 ஒன்பதாவது நாள் வாக்கு சேகரிப்பு மற்றும் பொதுக்கூட்டம் | நாம் தமிழர் கட்சி

வருகின்ற டிசம்பர் 21ஆம் நாள் நடைபெறவிருக்கும் ஆர்.கே நகர் இடைதேர்தலில் நாம் தமிழர் கட்சி சார்பில் வேட்பாளராக மாநில ஒருங்கிணைப்பாளர் கா.கலைக்கோட்டுதயம் அவர்கள் மெழுகுவர்த்திகள் சின்னத்தில் போட்டியிடுகிறார். இதனையொட்டி கடந்த 01-12-2017 முதல் நாம் தமிழர் கட்சியின் தேர்தல் பரப்புரைப் பணிகள் முழுவீச்சில் தொடங்கி நடைபெற்றுவருகிறது.

10வது நாளான நேற்று 10-12-2017 (ஞாயிற்றுக்கிழமை) காலை 09 மணி முதல் 12 மணிவரை தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், வேட்பாளர் கலைக்கோட்டுதயம், மாநில ஒருங்கிணைப்பாளர்கள் அன்புத்தென்னரசன், சிவக்குமார், இராவணன், கதிர்.இராஜேந்திரன், கொள்கைப்பரப்பு செயலாளர் ஜெயசீலன், மகளிர் பாசறை அமுதா நம்பி, மதுரை வெற்றிக்குமரன், துறைமுகம் அன்வர்பேக், இளைஞர் பாசறை ஜெகதீசப் பாண்டியன், ஆர்.கே நகர் சிதம்பரம் மற்றும் சூர்யா, மாணவர் பாசறை கார்த்திக் உள்ளிட்ட நாம் தமிழர் உறவுகள் 43வது வட்டம், பவர் குப்பம், சிங்காரவேலர் நகர், திருவள்ளுர் நகர், காசிமாநகர் உள்ளிட்ட பகுதிகளில் வீதிவீதியாகச் சென்று வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டனர். மதிய உணவு இடைவேளைக்குப் பிறகு பிற்பகல் 02 மணி முதல் 5 மணிவரை 43வது வட்டம், பவர் குப்பம், சிஜி நகர், வினாயகபுரம், ஒத்தவாடை, பல்லவன் நகர், காசிபுரம் ‘B’ Block, திடீர் நகர் உள்ளிட்ட பகுதிகளில் வாகனப் பரப்புரை மூலம் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டனர்.

அதனைத்தொடர்ந்து மாலை 06 மணிக்கு சீமான் தலைமையில் 43வது வட்டம், சிஜி காலனி. சந்தை அருகில் பரப்புரைப் பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில் மழலையர் பாசறை தமிழ் அமிழ்து, புதுக்கோட்டை ஜெயசீலன், இளைஞர் பாசறை அறிவுச்செல்வன், வேட்பாளர் கலைக்கோட்டுதயம் உள்ளிட்டோர் உரையாற்றினர். ஆர்.கே நகர் சிதம்பரம் மற்றும் சூர்யா பொதுக்கூட்ட ஏற்பாடுகளைக் கவனித்துக்கொண்டனர்.

இறுதியாக சீமான் அவர்கள் 50 ஆண்டுகால திராவிட ஆட்சிகளின் தவறுகளை எடுத்துரைத்தும் அரசியல், அமைப்பு, அடிப்படை மாற்றத்திற்கான செயல்திட்டங்களை விளக்கியும் ஆர்.கே நகரில் நாம் தமிழர் கட்சி செயல்படுத்தவிருக்கும் திட்டங்களை எடுத்துக்கூறி மெழுகுவர்த்திகள் சின்னத்தில் போட்டியிடும் நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர் கலைக்கோட்டுதயம் அவர்களை ஆதரித்து உரையாற்றினார்.