ஆர்.கே நகர் தேர்தல் பரப்புரை: நாள் – 01 | வாக்கு சேகரிப்பு மற்றும் தெருமுனைக்கூடம்
வருகின்ற டிசம்பர் 21ஆம் நாள் நடைபெறவிருக்கும் ஆர்.கே நகர் இடைதேர்தலில் நாம் தமிழர் கட்சி சார்பில் வேட்பாளராக மாநில ஒருங்கிணைப்பாளர் கா.கலைக்கோட்டுதயம் அவர்கள் மெழுகுவர்த்திகள் சின்னத்தில் போட்டியிடுகிறார். இதனையொட்டி இன்று 01-12-2017 (வெள்ளிக்கிழமை) முதல் நமது கட்சியின் தேர்தல் பரப்புரைப் பணிகள் முழுவீச்சில் தொடங்கியது.
முதல் நாளில் காலை 08 மணி வேட்பாளர் கலைக்கோட்டுதயம் மற்றும் மாநில ஒருங்கிணைப்பாளர் அன்புத்தென்னரசன் உள்ளிட்ட நாம் தமிழர் உறவுகள் 47 வது வட்டம், கொருக்குப்பேட்டை மேம்பாலம் அருகிலிருந்து வீடு வீடாகச் சென்று வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டனர்.
அன்புத்தென்னரசன் தலைமையில் மாலை 06 மணிக்கு 47 வது வட்டம், பாரதி நகர், முருகன் கோயில் அருகில் தெருமுனைக்கூட்டம் நடைபெற்றது. இதில் இடும்பாவனம் கார்த்திக், செந்தில்குமார், மாரிமுத்து உள்ளிட்டோர் உரையாற்றினர்.
இறுதியாக கலைக்கோட்டுதயம் அவர்கள் ஆர்.கே நகரில் நாம் தமிழர் கட்சி செயல்படுத்தவிருக்கும் திட்டங்களை எடுத்துக்கூறி உரையாற்றினார்.
—
தலைமை அலுவலகச் செய்திக்குறிப்பு
நாம் தமிழர் கட்சி
+044 – 4380 4084