ஆர்.கே நகர் இடைத்தேர்தல் : மூன்றாம் நாள் | வாக்கு சேகரிப்பு மற்றும் தெருமுனைக்கூட்டம்

36

செய்தி: ஆர்.கே நகர் இடைத்தேர்தல் : மூன்றாம் நாள் | வாக்கு சேகரிப்பு மற்றும் தெருமுனைக்கூட்டம் | நாம் தமிழர் கட்சி

வருகின்ற டிசம்பர் 21ஆம் நாள் நடைபெறவிருக்கும் ஆர்.கே நகர் இடைதேர்தலில் நாம் தமிழர் கட்சி சார்பில் வேட்பாளராக மாநில ஒருங்கிணைப்பாளர் கா.கலைக்கோட்டுதயம் அவர்கள் மெழுகுவர்த்திகள் சின்னத்தில் போட்டியிடுகிறார்கள். இதனையொட்டி 01-12-2017 (வெள்ளிக்கிழமை) முதல் நமது கட்சியின் தேர்தல் பரப்புரைப் பணிகள் முழுவீச்சில் தொடங்கி நடைபெற்றுவருகிறது.

மூன்றாம் நாளான இன்று 03-12-2017 (ஞாயிற்றுக்கிழமை) காலை 08 மணி முதல் வேட்பாளர் கலைக்கோட்டுதயம் மற்றும் மாநில ஒருங்கிணைப்பாளர் அன்புத்தென்னரசன் உள்ளிட்ட நாம் தமிழர் உறவுகள் 42வது வட்டம், திலகர் நகர், மேட்டுக்கடை தெரு உள்ளிட்ட பகுதிகளில் வீடு வீடாகச் சென்று வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டனர். தொடர்ந்து பிற்பகல் 03 மணிமுதல் 42வது வட்டம், MCM தோட்டம், வண்ணாரப்பேட்டை அஞ்சல் நிலையம் உள்ளிட்ட பகுதிகளில் வீடு வீடாகச் சென்று வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டனர்

அதனைத்தொடர்ந்து மாலை 06 மணிக்கு அன்புத்தென்னரசன் தலைமையில் 42வது வட்டம், மேயர் பாசுதேவ் தெரு, சந்தை அருகில் தெருமுனைக்கூட்டம் நடைபெற்றது. இதில் புலவர் மறத்தமிழ்வேந்தன், இடும்பாவனம் கார்த்திக், செந்தில்குமார், மாரிமுத்து உள்ளிட்டோர் உரையாற்றினர்.

இறுதியாக கலைக்கோட்டுதயம் அவர்கள் ஆர்.கே நகரில் நாம் தமிழர் கட்சி செயல்படுத்தவிருக்கும் திட்டங்களை எடுத்துக்கூறி உரையாற்றினார்.


தலைமை அலுவலகச் செய்திக்குறிப்பு
நாம் தமிழர் கட்சி
+044 – 4380 4084

முந்தைய செய்திஅறிவிப்பு; ஆர்.கே நகர் இடைத்தேர்தல்: நான்காம் நாள் பரப்புரைத் திட்டம்
அடுத்த செய்திஅறிவிப்பு: ‘ஒகி’ புயலால் பாதிக்கப்பட்ட குமரி மாவட்ட மீனவர்களை  சீமான் நேரில் சந்திக்கிறார்