அறிவிப்பு: வீரப்பெரும்பாட்டியார் வேலுநாச்சியாரின் 221ஆம் ஆண்டு நினைவுநாள் – மலர்வணக்க நிகழ்வு | தலைமையகம்

116

அறிவிப்பு: வீரப்பெரும்பாட்டியார் வேலுநாச்சியாரின் 221ஆம் ஆண்டு நினைவுநாள் – மலர்வணக்க நிகழ்வு | தலைமையகம் | நாம் தமிழர் கட்சி

வீரப்பெரும்பாட்டியார் வேலுநாச்சியாரின் அவர்களின் 221ஆம் ஆண்டு நினைவுநாளையொட்டி நாளை 25-12-2017 (திங்கட்கிழமை) காலை 10 மணிக்கு சென்னை, வளசரவாக்கத்தில் உள்ள நாம் தமிழர் கட்சியின் தலைமை அலுவலகத்தில் மலர்வணக்க நிகழ்வு நடைபெறவிருக்கிறது. வீரப்பெரும்பாட்டியார் வேலுநாச்சியாரின் திருவுருவப்படத்திற்கு தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அவர்கள் மாலை அணிவித்து மலர்வணக்கம் செய்யவிருக்கிறார்.

அவ்வயம் சென்னை, திருவள்ளூர்,காஞ்சிபுரம் மாவட்ட உறவுகள் அனைவரும் தவறாமல் பங்கேற்குமாறு கேட்டுக்கொள்கிறோம்.

உலகில் பேரறிஞர்களும் முற்போக்கு சிந்தனையாளர்களும் புதிய வரலாறு படைத்த புரட்சியாளர்களும் பெண் என்பவள் எப்படி இருக்கவேண்டுமென்று எண்ணினார்களோ அந்தப் பெண்ணினத்தின் பெருமைமிகு அடையாளமாக வாழ்ந்தவள்

கணவனை இழந்துவிட்டபிறகு மூலையில் உட்கார்ந்து முக்காடைப் போட்டுகொண்டு மூக்கைச் சிந்திகொண்டு அழுதுகொண்டு இராமல் ஆங்கிலேயர்களோடு பேச ஆங்கிலம், பிரெஞ்சுக்காரர்களுடன் பேச பிரெஞ்சு, ஐதர் அலியோடு பேச உருது, சமஸ்கிருதம், தாய்மொழியில் அளவற்ற புலமை, வாள்வீச்சு, வேல்வீச்சு, குதிரையேற்றம் என எண்ணற்ற பயிற்சிகளைப் பெற்று உலகில் ஆணுக்கு நிகராகப் போர்க்களத்தில் வீரச்சமர் புரிந்து இழந்த தாய்நிலத்தை மீண்டும் போரிட்டு மீட்ட மானமறத்தி நமது வீரப்பெரும்பாட்டியார் வேலுநாச்சியாரின் நினைவுநாள் (25-12-2017)

நமது குலவிளக்கு கொண்டாப்படவேண்டிய நம் குலதெய்வம் நமது வீரப்பெரும்பாட்டியார் வேலுநாச்சியாரின் நினைவைப் போற்றுவோம்!

அவர்களுக்கு நம் புரட்சிகரமான வீரவணக்கத்தைச் செலுத்துவதில் பெருமைகொள்வோம்

நாம் தமிழர்


சீமான்
தலைமை ஒருங்கிணைப்பாளர்
நாம் தமிழர் கட்சி

தலைமை அலுவலகம்: எண்: 8, இராவணன் குடில், மருத்துவமனை சாலை, செந்தில்நகர், சின்னப்போரூர், சென்னை 600116

முந்தைய செய்தி24-12-2017 போற்றுதற்குரிய நம் வழிகாட்டி ஐயா பெரியார் 44ஆம் ஆண்டு நினைவுநாள்: புகழ் வணக்கம்
அடுத்த செய்திவீரப்பெரும்பாட்டியார் வேலுநாச்சியாரின் 221ஆம் ஆண்டு நினைவுநாள் – மலர்வணக்க நிகழ்வு