தேசியத்தலைவர் 63ஆம் ஆண்டு பிறந்தநாள் விழா – வில்லிவாக்கம் | சீமான் வாழ்த்துரை

160

செய்தி: 26-11-2017 தேசியத்தலைவர் 63ஆம் ஆண்டு பிறந்தநாள் விழா – வில்லிவாக்கம் | சீமான் வாழ்த்துரை | நாம் தமிழர் கட்சி

தேசியத்தலைவர் மேதகு வே.பிரபாகரன் அவர்களின் 63ஆம் ஆண்டு பிறந்தநாள் விழா கூட்டம் நாம் தமிழர் கட்சி சார்பாக, தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அவர்களின் தலைமையில் 26-11-2017 (ஞாயிற்றுக்கிழமை) மாலை 4 மணியளவில், வில்லிவாக்கம், சென்னை – திருவள்ளூர் தேசிய நெடுஞ்சாலையில் அமைந்துள்ள T.K.A திருமண மாளிகையில் நடைபெற்றது.

இதில் நாம் தமிழர் கட்சியின் மாநில ஒருங்கிணைப்பாளர்கள் அன்புத்தென்னரசன், கலைக்கோட்டுதயம், கதிர்.இராஜேந்திரன் மற்றும் களஞ்சியம்.சிவக்குமார், மாநில இளைஞர் பாசறை ஒருங்கிணைப்பாளர் அறிவுச்செல்வன், ஆன்றோர் அவைப் புலவர் மறத்தமிழ்வேந்தன், மகளிர் பாசறை அமுதா நம்பி, சுமித்ரா, வில்லிவாக்கம் தொகுதி பொறுப்பாளர்கள் வாகைவேந்தன், மணிகண்டன், ஆவடி நல்லதம்பி, குருதிக்கொடை பாசறை மு.ப.செ. நாதன், செய்திப்பிரிவு செயலாளர்கள் பாக்கியராசன் மற்றும் செந்தில்குமார், மாநில மாணவர் பாசறை ஒருங்கிணைப்பாளர்கள் கார்த்திக், கிருஷ்ணன், சாரதி உள்ளிட்ட பொறுப்பாளார்கள், உறுப்பினர்கள் மற்றும் பொதுமக்கள் ஏராளமானோர் பங்கேற்றனர்.

இராஜலிங்கம் அவர்கள் எழுதி, தமிழினியன் அவர்கள் இசையமைத்து பாடிய ‘நாம் தமிழர் எழுச்சிப்பண்’ சீமான் அவர்கள் வெளியிட செந்தில்குமார் பெற்றுக்கொண்டார்.

நாம் தமிழர் கட்சிக்கான செயலி (App) தகவல் தொழில்நுட்பப்பிரிவால் சீமான் முன்னிலையில் வெளியிடப்பட்டது.
https://play.google.com/store/apps/details?id=ntk.android.app

தேசியத்தலைவர் பிறந்தநாள் வாழ்த்துப்பாடல் ஆவடி தொகுதி சார்பாக வெளியிடப்பட்டது
https://www.youtube.com/watch?v=CPHbTkLnCeU

துறைமுகம் தொகுதி சார்பாக ஆர்.கே நகர் இடைதேர்தல் செலவுகளுக்காக நிதி வழங்கப்பட்டது.

இறுதியாக சீமான் வாழ்த்துரையாற்றினார்.


தலைமை அலுவலகச் செய்திக்குறிப்பு
நாம் தமிழர் கட்சி
+044 – 4380 4084