அறிவிப்பு: ம.பொ.சிவஞானம் அவர்களின் 22ஆம் ஆண்டு நினைவுநாள் – மலர்வணக்க நிகழ்வு (தியாகராய சாலை, பாண்டி பஜார் சென்னை)

113

அறிவிப்பு: 03-10-2017 ம.பொ.சிவஞானம் அவர்களின் 22ஆம் ஆண்டு நினைவுநாள் – மலர்வணக்க நிகழ்வு (தியாகராய சாலை, பாண்டி பஜார் சென்னை) | நாம் தமிழர் கட்சி

‘பெருந்தமிழர்’ ஐயா ம.பொ.சிவஞானம் அவர்களின் 22ஆம் ஆண்டு நினைவுநாளையொட்டி (03-10-2017) செவ்வாய் கிழமை காலை 10 மணியளவில் தியாகராய சாலை, பாண்டி பஜார் சென்னையில் அமைந்துள்ள அவரது திருவுருவச்சிலைக்கு நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அவர்கள் மாலை அணிவித்து மரியாதை செலுத்துகிறார்.
அவ்வயம் மாநில, மண்டல, மாவட்ட, வட்ட, நகர, ஒன்றிய, பகுதி, கிளை நிர்வாகிகள் மற்றும் இளைஞர், மாணவர், மகளிர், வீரத்தமிழர் முன்னணி, மருத்துவர், வழக்கறிஞர், உழவர், குருதிக்கொடை, கையூட்டு-ஊழல் ஒழிப்பு, தொழிலாளர், மீனவர், சுற்றுச்சூழல் பாதுகாப்பு, மழலையர் உள்ளிட்ட அனைத்து பாசறைகளின் பொறுப்பாளர்களும் தவறாமல் பங்கேற்குமாறு கேட்டுக்கொள்கிறோம்.

நாள்: 03-10-2017 செவ்வாய்கிழமை காலை 10 மணி
இடம்: தியாகராய சாலை, பாண்டி பஜார் சென்னை
தொடர்புக்கு: +91-9940632321

தலைமை அலுவலகச் செய்திக்குறிப்பு
நாம் தமிழர் கட்சி
+044 – 4380 4084