திண்டுக்கல் மாநகர் 36வட்டம் வேடபட்டியில் 24/09/2017 அன்று மாலை 5 மணியளவில் நாம் தமிழர் கட்சியின் கொள்கை விளக்க தெருமுனைக்கூட்டம் நடைபெற்றது.
தொகுதி செயலாளர் இரா.செயசுந்தர் அவர்கள் தலைமை வகித்து உரையாற்றினார்.
மாவட்ட செய்தி தொடர்பாளர் பாண்டித்துரை, ஒன்றிய செயலாளர் மு.தினேஷ் முன்னிலை வகித்தனர்.
கூட்ட நிகழ்வினை 36 வட்ட பொறுப்பாளர்கள் சக்தி, ராசா ஒருங்கிணைத்தனர்.
சீலப்பாடி ஊராட்சி செயலாளர் சரவணன், ராஜேஷ், செட்டிநாயக்கன்பட்டி ஊராட்சி செயலாளர் சதீஸ், பாலகிருஸ்ணாபுரம் ஊராட்சி செயலாளர் அந்தோணி, 32 வது வட்டச் செயலாளர் மகேசுவரன், இரா.ம.காலனி வட்ட பொறுப்பாளர்கள் கணேசன் மற்றும் ஜாபர் ஆகியோர் களப்பணியாற்றினர்.
நிகழ்வில் மாநில கொள்கை பரப்பு செயலாளர்களில் ஒருவரும் உயர்நீதிமன்ற வழக்கறிஞருமான இ.த.சீமான் அவர்கள் சிறப்புரையாற்றினார்.