பா.விக்னேசு மற்றும் அனிதா நினைவேந்தல் – ஐக்கிய அரபு அமீரக செந்தமிழர் பாசறை

46

ஐக்கிய அரபு அமீரக செந்தமிழர் பாசறை சார்பில், 16-09-2017 அன்று காவிரி நதிநீர் உரிமைக்காகத் தன்னுயிரைத் தீக்கிரையாக்கிய தம்பி காவிரிச்செல்வன் பா.விக்னேசு முதலாண்டு நினைவேந்தல் மற்றும் ‘நீட்’ தேர்வினால் தனது மருத்துவ படிப்பை தொடர இயலாமல் இன்னுயிர் ஈந்த ஏழை மாணவி தங்கை அனிதாவிற்கு கண்ணீர் வணக்கம் செலுத்தப்பட்டது. அமீரகத்தின் அஜ்மான் மண்டலத்தில் நடைபெற்ற இந்நிகழ்வில் நூற்றுக்கும் மேற்பட்ட தமிழ் உறவுகள் தங்களது குடும்பத்துடன் பங்கேற்றனர்.


தலைமை அலுவலகச் செய்திக்குறிப்பு
நாம் தமிழர் கட்சி