அனிதாவின் தற்கொலைக்கு தூண்டுதலாக இருந்த மத்திய மாநில அரசுகளை கண்டித்து மாபெரும் பேரணி மற்றும் ஆர்ப்பாட்டம் திருவண்ணாமலை மாவட்டத்தில் நாம் தமிழர் கட்சி சார்பாக கீழ்பென்னாத்தூர் வட்டாட்சியர் அலுவலகத்தில் இருந்து கீழ்பென்னாத்தூர் பேருந்து நிலையம் வரை பேரணியாக சென்று கீழ்பென்னாத்தூர் பேருந்து நிலையம் அருகில் ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.
தமிழ் (எ) பிரபு தலைமை வகித்தார், ஒன்றிய செயலாளர் ராமகிருஷ்ணன் முன்னிலை வகித்தார், செஞ்சி தொகுதி செயலாளர் சுகுமாறன், செஞ்சி தொகுதி இணைச் செயலாளர் பழனி, திருவண்ணாமலை தொகுதிச் செயலாளர் மாதவன், திருவண்ணாமலை நகரச்செயலாளர் பாலசுப்பிரமணியம், துரிஞ்சாபுரம் துரைராஜ் உள்ளிட்ட நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் பங்கேற்று கண்டன முழக்கங்களை எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.