தமிழ்த்தென்றல் திரு.வி.க 135ஆம் ஆண்டு பிறந்தநாள் – சீமான் மலர்வணக்கம்

58

தமிழ்த்தென்றல் திரு.வி.க 135ஆம் ஆண்டு பிறந்தநாள் – சீமான் மலர்வணக்கம் செய்தார் | நாம் தமிழர் கட்சி

தமிழ்த்தென்றல் திரு.வி.க அவர்களின் 135ஆம் ஆண்டு பிறந்தநாளை முன்னிட்டு இன்று (26-08-2017) காலை 9 மணியளவில் சென்னை போரூரை அடுத்த துண்டலம் கிராமத்தில் அமைந்துள்ள திரு.வி.க இல்லத்தில் உள்ள அவரது திருவுருவச்சிலைக்கு நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அவர்கள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

மாநில ஒருங்கிணைப்பாளர் அன்புத்தென்னரசன், மகளிர் பாசறை ஒருங்கிணைப்பாளர் அமுதாநம்பி, கொள்கைப் பரப்பு செயலாளர் திலீபன், மதுரவாயல் பகுதி பொறுப்பாளர்கள் மு.வாசு, ஆனந்தன், விருகம்பாக்கம் கதிர்.ராஜேந்திரன், ஆவடி நல்லதம்பி உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

தலைமை அலுவலகச் செய்திக்குறிப்பு
நாம் தமிழர் கட்சி
+044 – 4380 4084