05-04-2017 இரா.கி நகர் இடைத்தேர்தல்: பரப்புரைப் பொதுக்கூட்டம் – சுண்ணாம்பு கால்வாய்

29

05-04-2017 இரா.கி நகர் இடைத்தேர்தல்: பரப்புரைப் பொதுக்கூட்டம் – சுண்ணாம்பு கால்வாய் | நாம் தமிழர் கட்சி

ஏப்ரல் 12ஆம் தேதி நடைபெறவிருக்கும் இராதாகிருஷ்ணன் நகர் சட்டமன்ற இடைத்தேர்தலில் நாம் தமிழர் கட்சியின் வேட்பாளராக கா.கலைக்கோட்டுதயம் அவர்கள் “மெழுகுவர்த்திகள்” சின்னத்தில் போட்டியிடுகிறார். இடைத்தேர்தலில் வென்று புதிய மாற்றத்தை உருவாக்கும் நோக்கில் நாம் தமிழர் கட்சியினர் தீவிரமாக தேர்தல் பரப்புரையில் ஈடுபட்டுள்ளனர்.

தொடர்ந்து ஐந்தாவது நாளாக இன்று  05-04-2017 (புதன்கிழமை) காலை 7 மணியளவில் சுண்ணாம்பு கால்வாய் பேருந்துநிலையம், மணலிசாலை, எழில்நகர் செல்லும் வழி ஆகிய இடங்களில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அவர்கள்  வீடு வீடாக நடந்து மக்களை நேரில் சந்தித்து வாக்குச் சேகரிப்பில் ஈடுபட்டார். மேலும் இன்று மாலை 4 மணியளவில் எழில்நகர் தொப்பை விநாயகர் கோயில் அருகேயுள்ள வீதிகளில் வாக்கு சேகரிக்கவுள்ளார். அதனைத்தொடர்ந்து இரவு 7 மணிக்கு, சுண்ணாம்பு கால்வாய் பேருந்து நிலையம் அருகில் தேர்தல் பரப்புரைப் பொதுக்கூட்டம் நடைபெறவுள்ளது. இதில் சீமான் எழுச்சியுரையாற்றுகிறார்


தலைமை அலுவலகச் செய்திக்குறிப்பு
நாம் தமிழர் கட்சி