இரா.கி நகர் இடைத்தேர்தல்: வேட்பாளர் அறிமுகப் பொதுக்கூட்டம் – சீமான் எழுச்சியுரை

33

நடைபெறவிருக்கும் இராதாகிருஷ்ணன் நகர் சட்டமன்ற இடைத்தேர்தலில் நாம் தமிழர் கட்சியின் வேட்பாளராக கா.கலைக்கோட்டுதயம் அவர்கள் போட்டியிடுகிறார். இதனையொட்டி இன்று 23-03-2017 (வியாழக்கிழமை) மாலை 5 மணியளவில், சென்னை, புதுவண்ணாரப்பேட்டை, திருவொற்றியூர் நெடுஞ்சாலையில் அமைந்துள்ள செளந்தரபாண்டி சுப்பம்மாள் பெண்கள் மேல்நிலைப் பள்ளி அருகில் வேட்பாளர் அறிமுகப் பொதுக்கூட்டம் நடைபெற்றது

இதில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அவர்கள் இராதாகிருஷ்ணன் நகர் சட்டமன்றத் தொகுதி வேட்பாளர் கா.கலைக்கோட்டுதயம் அவர்களை பொதுமக்கள் முன்னிலையில் அறிமுகம் செய்வித்து தேர்தல் பரப்புரை செய்தார்.

கட்சியின் முக்கியப் பொறுப்பாளர்கள் உள்ளிட்ட ஏராளமான பொதுமக்கள் பங்கேற்றனர்.