தொடரும் மீனவர் படுகொலை: இலங்கைத் தூதரகம் முற்றுகைப் போராட்டம் – சீமான் கைது

112

13-03-2017 தமிழக மீனவர்களின் தொடர் படுகொலையைக் கண்டித்து சீமான் தலைமையில் இலங்கைத் தூதரகம் முற்றுகைப் போராட்டம்
=============================================

இராமேசுவரம் தங்கச்சிமடத்தைச் சேர்ந்த தமிழக மீனவர் பிரிட்சோ, கடந்த 06-03-2017 அன்று, கச்சத்தீவு அருகே மீன் பிடித்தபோது, இலங்கை கடற்படையினரால் சுட்டுக்கொல்லப்பட்டார். தமிழ் மீனவரைச் சுட்டுப்படுகொலை செய்த சிங்களப் பேரினவாத அரசைக் கண்டித்தும், தொடரும் தமிழக மீனவர் மீதான இனவெறி தாக்குதலைத் தடுக்க இலங்கையின் மீது போர்தொடுத்து கச்சத்தீவை மீட்க இந்திய அரசை வலியுறுத்தியும் நாம் தமிழர் கட்சி சார்பாக இன்று 13-03-2017 திங்கள்கிழமை காலை 10 மணியளவில் சென்னை, நுங்கம்பாக்கத்திலுள்ள இலங்கைத் தூதரகத்தை முற்றுகையிடும் போராட்டம் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அவர்கள் தலைமையில் நடைபெற்றது.

நாம் தமிழர் கட்சியினர் பெருந்திரளாகப் பங்கேற்று இலங்கை தூதரகம் முன்பு கண்டன முழக்கங்களை எழுப்பியவாறு முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் காவல்துறையினர் சீமான் உள்ளிட்ட 250க்கும் மேற்பட்ட நாம் தமிழர் கட்சியினரை கைது செய்து அருகிலுள்ள அரங்கில் அடைத்துவைக்கபட்டனர். மாலை 6 மணியளவில் அனைவரும் விடுவிக்கப்பட்டனர்.

முந்தைய செய்திதமிழ் மீனவர் சுட்டுப்படுகொலை: மீனவர்கள் போராட்டத்தில் சீமான் [புகைப்படங்கள்]
அடுத்த செய்திJNU மாணவர் முத்துக்கிருஷ்ணன் மரணத்திற்கு உரிய நீதிவிசாரணை வேண்டும்- சீமான் வலியுறுத்தல்