தமிழ்த்தேசியப் போராளி சுபா.முத்துக்குமார் நினைவேந்தல் பொதுக்கூட்டம் – கொத்தமங்கலம் (புதுக்கோட்டை மாவட்டம்) | 15-02-2017
தமிழ்த்தேசியப் போராளி சுபா.முத்துக்குமார் அவர்களின் 6ஆம் ஆண்டு நினைவைப் போற்றும் விதமாக நாம் தமிழர் கட்சி நடத்துகிற நினைவேந்தல் பொதுக்கூட்டம் வருகின்ற 15.02.2017 புதன்கிழமை மாலை 5 மணிக்கு புதுக்கோட்டை மாவட்டம் கொத்தமங்கலத்தில் நடைபெறவுள்ளது.
தலைமை:
செந்தமிழன் சீமான்
தலைமை ஒருங்கிணைப்பாளர்
அதுசமயம் மாநில, மண்டல, மாவட்ட, வட்ட, நகர, ஒன்றிய, பகுதி, கிளை நிர்வாகிகள் மற்றும் இளைஞர், மாணவர், மகளிர், மருத்துவர், வழக்கறிஞர், உழவர், தொழிலாளர், இணையதளப் பாசறை உள்ளிட்ட அனைத்து பாசறைகளின் பொறுப்பாளர்களும் கலந்துகொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம்.
—
தலைமை அலுவலகச் செய்திக்குறிப்பு
நாம் தமிழர் கட்சி