26-11-2016 தேசியத்தலைவர் 62வது பிறந்தநாள் விழா – சீமான் வாழ்த்துரை

16

26-11-2016 தமிழ்த்தேசியத் தலைவர் 62வது பிறந்தநாள் விழா கூட்டம் | நாம் தமிழர் கட்சி
=====================================
தமிழ்த்தேசியத் தலைவர் மேதகு வே.பிரபாகரன் அவர்களின் 62வது பிறந்தநாளையொட்டி இன்று 26-11-2016 சனிக்கிழமை, மாலை 5 மணியளவில் சென்னை வளசரவாக்கத்தில் உள்ள நாம் தமிழர் கட்சியின் தலைமை அலுவலகத்தில் தலைமை ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் சீமான் அவர்கள் தலைமையில் தேசியத்தலைவர் பிறந்தநாள் விழா கூட்டம் நடைபெற்றது. இதில் நாம் தமிழர் கட்சியின் முக்கிய பொறுப்பாளர்கள், உறுப்பினர்கள் மற்றும் பொதுமக்கள் பெருந்திரளாகப் பங்கேற்றனர்.

புகைப்படங்கள்: தேசியத்தலைவர் 62வது பிறந்தநாள் விழா

முன்னதாக அனைவருக்கும் இனிப்பும் பொங்கலும் வழங்கப்பட்டது, இவ்விழாவில், குழந்தைகளுக்கு அழகு தமிழில் பெயர் சூட்டுவதற்காக ஆட்சிமொழி பாசறை புலவர் மறத்தமிழ்வேந்தன் எழுதிய 62000 தமிழ் பெயர்கள் கொண்ட “அகரமுதலி” என்ற புத்தகத்தை சீமான் வெளியிட ‘தமிழன்’ தொலைக்காட்சி நிறுவனர் கலைகோட்டுதயம் பெற்றுக்கொண்டார். மேலும் “தம்பி” மாத இதழ் மற்றும் 2017ஆம் ஆண்டிற்கான உலகத்தமிழர் நாள்காட்டியையும் சீமான் வெளியிட்டார்.

முந்தைய செய்தி26-11-2016 தேசியத்தலைவர் பிறந்தநாள் – மாபெரும் குருதிக்கொடை முகாம் | சீமான் இல்லம்
அடுத்த செய்திஇனத்தின் விடுதலை எனும் புனிதக்கனவைத் தூக்கிச் சுமக்க நம் மாவீரர் தெய்வங்கள் மீது ஆணையிட்டு உறுதியேற்போம் : சீமான் மாவீரர் நாள் அறிக்கை