உலகத்தமிழ்ப் பேரினத்தின் பெருமைமிகு கலை அடையாளம் நடிகர் திலகம் ஐயா சிவாஜி கணேசன் அவர்களுடைய 88ஆம் ஆண்டு பிறந்தநாளையொட்டி இன்று (01-10-2016) காலை 11:30 மணிக்கு, சென்னை கடற்கரை சாலையிலுள்ள அவரது திருவுருவச்சிலைக்கு நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் சீமான் அவர்கள் மாலை அணிவித்து மலர்வணக்கம் செலுத்தினார். நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர்கள் மற்றும் உறுப்பினர்கள் திரளாக பங்கேற்று புகழ் வணக்கத்தைச் செலுத்தினார்.
இதுகுறித்து நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் சீமான் அவர்கள் வெளியிட்டுள்ள வாழ்த்துக்குறிப்பில் கூறியிருப்பதாவது,
தன் அசாத்திய கலைத்திறமையால் இந்தவுலகையே அசத்திய மாமேதை!
தமிழனாகப் பிறந்து தமிழினத்திற்குப் பெருமை சேர்த்த பெருங்கலைஞன்!
மறக்கமுடியாத திரைக்காவியங்களில் நடித்து மக்களின் உள்ளங்களில் நிறைந்து நிலைத்து வாழும் கலைத்தாயின் தலைமகன்!
தமிழ்த்தேசிய இனத்தின் பெருமைமிகு கலை அடையாளம் நமது ஐயா நடிகர் திலகம் சிவாஜி கணேசன் அவர்களின் பிறந்தநாள் இன்று (01-10-2016) அவர்களினுடைய பிறந்தநாளில் அந்தப் பெருங்கலைஞனுக்கு நம் புகழ் வணக்கத்தைச் செலுத்துவதில் தமிழ்ப் பிள்ளைகள் நாம் பெருமை கொள்வோம்!
நாம் தமிழர்!
– இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது