உள்ளாட்சித் தேர்தலிலும் மெழுகுவர்த்திகள் சின்னம் – உறுதிப்படுத்தியது தேர்தல் ஆணையம்

306

naam-tamilar-election-symbol-candles

நாம் தமிழர் கட்சிக்கு உள்ளாட்சித் தேர்தலிலும் ‘மெழுகுவர்த்திகள்’ சின்னத்தை தமிழ்நாடு மாநிலத் தேர்தல் ஆணையம் ஒதுக்கீடு செய்து இன்று (30-09-2016) ஆணை வெளியிட்டுள்ளது.

இதுதொடர்பாக அக்கட்சியின் மாநிலச் செய்தித்தொடர்பாளர் பாக்கியராசன்.சே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது,

நடந்து முடிந்த 2016-சட்டமன்றத் தேர்தலைப் போலவே, நடைபெறவிருக்கின்ற உள்ளாட்சித் தேர்தலிலும் நாம் தமிழர் கட்சியானது தனித்துப் போட்டியிடுகிறது. உள்ளாட்சித் தேர்தலிலும் ‘மெழுகுவர்த்திகள்’ சின்னத்தையே பொதுச்சின்னமாக நாம் தமிழர் கட்சிக்கு தமிழ்நாடு மாநிலத் தேர்தல் ஆணையம் ஒதுக்கீடு செய்து இன்று (30-09-2016) மாலை ஆணை வெளியிட்டுள்ளது.

ஆகையினால் நடைபெறவிருக்கின்ற 2016 தமிழ்நாடு உள்ளாட்சித் தேர்தலில் மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி, ஊராட்சி என கட்சிச் சின்னத்தில் நிற்கக்கூடிய 20,220 பதவிகளுக்கும் நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர்கள் ‘மெழுகுவர்த்திகள்’ சின்னத்திலேயே போட்டியிடுவார்கள் என பேரறிவிப்பு செய்கிறோம்.

– இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.

naam-tamilar-election-symbol-candles-tn-election-commission-confirm-letter.jpg
naam-tamilar-election-symbol-candles-tn-election-commission-confirm-letter.jpg
naam-tamilar-election-symbol-candles-tn-election-commission-confirm-letter.jpg

இனம் ஒன்றாவோம்! இலக்கை வென்றாவோம்! என்ற இலட்சிய முழக்கத்தை முன்னிறுத்தி அடுத்தகட்ட பயணத்திற்கு அணியமாவோம்!

முந்தைய செய்திஉள்ளாட்சித் தேர்தல் வேட்பாளர் தேர்வுக்கான முக்கிய அறிவிப்பு
அடுத்த செய்தி01-10-2016 நடிகர் திலகம் சிவாஜிகணேசன் பிறந்தநாளையொட்டி சீமான் மலர்வணக்கம்