தமிழக முதல்வர் முழுமையாக குணமடைந்து முன்பை விட உறுதியான மனத்திடத்தோடு தனது பணிக்குத் திரும்ப சீமான் வாழ்த்து
இதுகுறித்து நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் சீமான் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது,
மாண்புமிகு தமிழக முதல்வர் செல்வி ஜெயலலலிதா அவர்கள் காய்ச்சல் மற்றும் நீர்ச்சத்து இழப்பு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதை அறிந்து கவலையுற்றேன்.
நீண்ட பொது வாழ்க்கையில் தன்னை ஈடுபடுத்திக் கொண்டிருக்கும் அம்மையார் அவர்கள் உடல்நலம் பெற்று மீண்டுவர வேண்டும். அவர் முழுமையாக குணமடைந்து முன்பை விட உறுதியான மனத்திடத்தோடு தனது பணிக்குத் திரும்ப மனம்நிறைந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
– இவ்வாறு அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது