தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு நடத்தும் முழுக் கடையடைப்புப் போராட்டம் – நாம் தமிழர் கட்சி ஆதரவு.

43

தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு நடத்தும் முழுக் கடையடைப்புப் போராட்டம் – நாம் தமிழர் கட்சி ஆதரவு.

இதுகுறித்து நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் சீமான் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது,

கர்நாடகாவில் இருந்து தமிழகத்திற்குக் காவிரி தண்ணீர் கொடுக்க மறுத்து உச்சநீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து அப்பாவி தமிழர்களின் வணிக நிறுவனங்களின் மீதும் வாகனங்கள் மற்றும் அவர்களது உடமைகள் மீதும் வன்முறையைக் கட்டவிழ்த்து விட்டு தீக்கிரையாக்கி தாங்கொண்ணா பொருளாதார இழப்பை ஏற்படுத்தும் கன்னட வெறியர்களின் வன்முறையைக் கண்டித்துத் தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு வருகின்ற செப்டம்பர் 16 ஆம் தேதி நடத்தும் மாநிலம் தழுவிய முழுக் கடையடைப்புப் போராட்டத்திற்கு நாம் தமிழர் கட்சி தன் முழு ஆதரவையும் வழங்குகிறது. தமிழர்களின் அனைத்து பிரச்சினைகளுக்கும் ஆதரவை வழங்கி போராட்டக்களத்தில் முதலில் நிற்கும் தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்புக்கு எங்களது புரட்சிகர வாழ்த்துகள்.

– இவ்வாறு அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது