புதுக்கோட்டை மாவட்டம் ஒடுக்கம்பட்டியை சேர்ந்த தம்பி இராஜ்குமார் அவர்களின் மகன் பாலசுப்பிரமணியம் அவர்கள் ஜெர்மனியில் நடைபெற்ற மாற்றுத்திறனாளிகளுக்கான பன்னாட்டு இறகு பந்து போட்டியில் பங்கேற்று தங்கம் வென்றுள்ள செய்தியறிந்து பெருமிதமும், மகிழ்ச்சியும் அடைந்தேன்.
‘ஊழையும் உப்பக்கம் காண்பர் உலைவின்றித் தாழாது உஞற்று பவர்’ எனும் தமிழ்மறையோன் நமது பெரும்பாட்டன் வள்ளுவப் பெருந்தகையின் கூற்றுக்கிணங்க, தன் நிலை கண்டு துவண்டு, சோர்ந்து விடாமல், தொடர்ச்சியாக முயன்று, தனக்குக் கிடைக்கப்பெற்ற மிகச்சொற்ப வாய்ப்பினைப் பயன்படுத்தி, தமது அயராத முயற்சியினாலும், அபாரத் திறமையினாலும் உலக அரங்கில் தமிழினத்தைத் தலைநிமிரச் செய்துள்ள அன்புமகன் பாலசுப்பிரமணியம் அவர்களுக்கு எனது அன்பையும், பாராட்டுகளையும் தெரிவித்துக்கொள்கிறேன்.
கடுமையான உழைப்பும், தளராத மன ஊக்கமும் இருந்தால் எத்தகைய சூழலிலும் சாதிக்க முடியும் என்பதை நிரூபித்து, இளந்தலைமுறை தமிழ்ப் பிள்ளைகளுக்கு முன்னுதாரணமாகத் திகழும் அன்புமகன் பாலசுப்பிரமணியம் அவர்கள் மேலும் பல சாதனைகளைப் படைக்க எனது உள்ளம் கனிந்த நல் வாழ்த்துகள்!
புதுக்கோட்டை மாவட்டம் ஒடுக்கம்பட்டியை சேர்ந்த தம்பி இராஜ்குமார் அவர்களின் மகன் பாலசுப்பிரமணியம் ஜெர்மனியில் நடைபெற்ற மாற்றுத்திறனாளிகளுக்கான பன்னாட்டு இறகுபந்து போட்டியில் பங்கேற்று தங்கம் வென்றுள்ள செய்தியறிந்து பெருமிதமும் மகிழ்ச்சியும் அடைந்தேன். (1/4)https://t.co/NRHe26koMd pic.twitter.com/04DobivL3Q
— செந்தமிழன் சீமான் (@Seeman4TN) August 11, 2023
– செந்தமிழன் சீமான்
தலைமை ஒருங்கிணைப்பாளர்
நாம் தமிழர் கட்சி