நாம் தமிழர் தொழிலாளர் நலச்சங்கம் சார்பாக கோரிக்கை மனு அளிப்பு!

36

அரசுப் போக்குவரத்துத்தொழிலாளர்களின் 13ஆவது ஊதிய உயர்வு ஒப்பந்த பேச்சுவார்த்தை அடுத்த மாதம் நடைபெறவுள்ளது. ஆகவே, நாம்தமிழர் தொழிலாளர் நலச்சங்கத்தின் சார்பாக 52 கோரிக்கைகளை முன்வைத்து கோரிக்கை மனுவானது போக்குவரத்து அமைச்சரிடமும், அரசுப் போக்குவரத்துத் தலைமை செயலாளரிடமும், மாநகர போக்குவரத்து மேலாண் இயக்குனரிடமும் 17-08-2016 அன்று தலைமைச் செயலகத்தில் வழங்கப்பட்டது. இதில் சங்கத்தின் பேரவை தலைவர் அ.தசரதன் மற்றும் போக்குவரத்து மண்டல நிர்வாகிகள் கோவை அகதூர், ஈரோடை மேகநாதன், திருப்பூர் செந்தில் ஆகியோர் பங்கேற்றனர்.