21-06-2016 தினம் ஒரு சிந்தனை – 12 | செந்தமிழன் சீமான்

310

மரங்கள் கூடத் தங்கள் மரணத்திற்குப் பிறகு வாழ்கின்றன தொட்டிலாய், கட்டிலாய், கதவாய், சன்னலாய், நாற்காலியாய், மேசையாய், நிலையாய், கலையாய் இப்படிப் பல வடிவங்களில்; இறந்தபிறகு நம்மாலும் வாழ முடியும் நம் உடல் உறுப்புகளைத் தானம் செய்தால். பாகிஸ்தானில் ராவல்பிண்டி என்ற இடத்தில் பிறந்த முகமது தல்கா என்கிற சிறுவன் பிறவியிலேயே அவனுக்குக் கண் பார்வை இல்லை அந்த இரண்டு வயது சிறுவனுக்கு மாற்றுக்கண் பொருத்தினால் பார்வை வரும் என்கிறார்கள் மருத்துவர்கள்.

தமிழ்நாட்டில் சென்னையில் ஒரு மருத்துவமனையில் சேர்க்கிறார்கள் அந்த வேளையில் மயிலாப்பூரைச் சேர்ந்த ஒரு பெருமகள் தன் கண்களைத் தானம் செய்து வைத்திருந்தார்கள், அந்தக் கண்களை அந்தச் சிறுவனுக்குப் பொருத்தினார்கள் பார்வை வந்தது. என் அன்பிற்குரியவர்களே இதுவரை இந்த நாட்டில் பகவத் கீதையைப் படித்துவந்த அந்தக் கண்கள் இனி பாகிஸ்தானில் திருக்குரானைப் படிக்கப்போகிறது. மதங்களைக் கடந்து இங்கே மனிதம் வாழ்கிறது.