மழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் நிவாரணப் பணியில் நாம் தமிழர் கட்சி (9-12-2015)
எழும்பூர் மற்றும் திருவொற்றியூர் தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் மழையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அரிசி, முட்டை, ரொட்டி, புடவை, போர்வை போன்ற அத்தியாவசிய பொருட்களை வீடு வீடாக சென்று மக்களிடம் வழங்கினார்.
கவர்ச்சி அரசியல் தான் நடக்கிறது
இங்கு அம்மையார் ஜெயலலிதா, அய்யா கலைஞர் இருவருமே பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவவேண்டுமென நினைக்கவில்லை, இவர்கள் மக்களுக்குச் செலவழிக்கும் பணத்தை விட, விளம்பரத்திற்குச் செலவழிக்கும் கோடிகள்தான் அதிகம். ஜெயலலிதா இருந்தால் ஜெயலலிதா படம், கலைஞர் வந்தால் கருணாநிதி படம், இந்த கவர்ச்சி அரசியல்தான் இங்கு நடக்கிறது.
இலங்கைக்கு மட்டும் 80ஆயிரம் கோடியா?
தன் சொந்த நாட்டு மக்களை சுட்டு கொல்லும் இலங்கை அரசுக்கு 80ஆயிரம் கோடி, தென் ஆப்ரிக்காவுக்கு 60ஆயிரம் கோடி என கொட்டி கொடுக்கும் மத்திய அரசு, இங்கு கடலூர் என்ற மாவட்டமே காணாமல் போய்விட்டது அதுமட்டுமல்லாமல் தமிழகத்தின் தலைநகர் மறுகட்டமைப்பு செய்யவேண்டிய கட்டாயத்தில் உள்ளது. இப்படி தமிழகமே நிலைகுலைந்து நிற்கும் நிலையில் பல இலட்சம் மக்கள் அடிப்படை வசதிகள் எதுவும் இன்றி அகதிகளாக நிற்கிறார்கள். இந்த நிலையில் தமிழகத்திற்கு இலட்சம் கோடியோ அல்லது 50ஆயிரம் கோடியோ கொடுக்காமல் வெறும் 1000கோடியை ஒதுக்குகிறது இந்த அரசாங்கம் அதுவும் தவணைமுறையில், அப்படியென்றால் தமிழக மக்களைப் பற்றிய இவர்களின் நிலைதான் என்ன?.
அடிப்படை வசதி
இந்த தெருவில் குடித்து நாசாமாக போக மூன்று சாராய கடை உள்ளது ஆனால் இங்கு வாழும் மக்கள் பயன் படுத்த கழிவறை உள்ளதா. அப்படியென்றால் இங்கு வாழும் பெண்களை பற்றி இந்த அரசாங்கத்திற்கு ஏதாவது அக்கறை உள்ளதா?. இந்த திராவிட அரசாங்கத்திற்கு கொள்ளை அடிப்பதை தவிர, எதை பற்றியுமே அக்கறை இல்லை, அப்படி இருந்து இருந்தால்தான் இவ்வளவு பெரிய இழப்புகள் வராமல் தடுத்து இருக்க முடியுமே என சீமான் கூறினார்.