அன்பான தாய்த்தமிழ் உறவுகளே!
கடந்த கால செயல்பாடுகளை மீளாய்வு செய்யவும், எதிர்கால திட்டங்களை வகுத்து அதை நோக்கிய பயணத்தை சீர்மை படுத்தவும் ஒரு ஒன்றுகூடல் அவசியமாகிறது. எனவே வருகின்ற 29-11-2015 ஞாயிற்று கிழமை அண்ணன் சீமான் தலமையில் இராவணன் குடிலில் நடைபெற இருக்கிறது.
இதில் வீரத்தமிழர் முன்னணியின் மாநில, மண்டல, மாவட்ட, சட்டமன்ற தொகுதியின் செயலாளர்கள் தவறாமல் கலந்து கொள்ள வேண்டுகிறேன்.
தன்னை வீரத்தமிழர் முன்னணியின் இணைத்துக்கொள்ள விரும்பும் உறவுகளும் தவறாமல் கலந்துகொள்ள வேண்டுகிறோம். கலந்துகொள்ள இருக்கும் உறவுகள் தங்களின் வருகையையும் எங்களுக்கு தெரிய படுத்த வேண்டுகிறேன்.
அதே நாளில் “வேல்வீச்சு” இதழை, அதன் நிர்வாகத்தை முறைப்படுத்தவும வேல்வீச்சு ஆசிரியர் குழுக்கூட்டம் நடைபெற இருப்பதையும் இதன் மூலம் தெரிவித்து கொள்கிறேன்.
ஒன்றுகூடுவோம் உறவுகளே…
வீரத்தமிழர் முன்னணி…
வெல்வது ஒன்றே முதற்பணி.
செந்தில்நாதன் சேகுவேரா,
பூலித்தேவன்,
கூத்தன் ,
வெற்றிவேல் பாண்டியன்,
தூத்துக்குடி கலை,
பாரிசாலன்