கட்சி செய்திகள்தமிழ்நாட்டுக் கிளைகள்குருதிக்கொடைப் பாசறைதஞ்சாவூர் மாவட்டம் திருவிடைமருதூர் தொகுதியில் குருதிக்கொடை முகாம் மற்றும் மாவீரர் நாள் நவம்பர் 20, 2015 48 தஞ்சை வடக்கு மண்டலம் திருவிடைமருதூர் சட்டமன்றத் தொகுதி சார்பில் திருப்பனந்தாள் சன்னதி மண்டபத்தில் நடைபெற்ற தேசியத்தலைவர் மேதகு வே பிரபாகரன் அவர்களின் 61 ஆவது பிறந்த நாளை முன்னிட்டு குருதிக் கொடை முகாமும். .மாவீரர் நாள் 2015 முன்னிட்டு மாவீரர் வீரவணக்க நிகழ்வுகளும் நடைப்பெற்றன. இந்த நிகழ்விற்கு திருவிடைமருதூர் சட்டமன்ற தொகுதி மாவட்ட செயலாளர் செ.அரவிந்தன் தலைமை வகித்தார். தஞ்சை வடக்கு மண்டல செயலாளர் வழக்கறிஞர் இரா.வினோபா முன்னிலை வகித்தார். சிறப்பு அழைப்பாளராக மாநில இளைஞர் பாசறை செயலாளர் வழக்கறிஞர் மணி செந்தில் கலந்துக் கொண்டு தலைமைக்கு பரிந்துரை செய்ய உள்ள பொறுப்பாளர்கள் பட்டியலினை அறிவித்து மாவீரர் வீரவணக்க உரை நிகழ்த்தினார். இந்நிகழ்ச்சியில் ஆதிகுமரவேல் உள்ளீட்ட கட்சி பொறுப்பாளர்கள் மற்றும் நாம் தமிழர் கட்சியினர் கலந்து கொண்டு குருதி அளித்து வீரவணக்கம் செலுத்தினர்.