தமிழ்நாடு நடிகர் சங்கம் எனப் பெயர் மாற்றம் செய்ய வேண்டும் என்ற நடிகர் ரஜினிகாந்த் கருத்துக்கு செந்தமிழன் சீமான் வரவேற்பு

32

ரஜினிகாந்த், தென்னிந்திய நடிகர் சங்கத்தை தமிழ்நாடு நடிகர் சங்கம் எனப் பெயர் மாற்றம் செய்ய வேண்டும் என்றும், கமலஹாசன் இந்திய நடிகர் சங்கம் என மாற்ற வேண்டும் எனவும் கூறியுள்ளனரே?

பலகோடி தமிழ் மக்களின் உணர்வுக்கு மதிப்பளித்து ஐயா திரு.ரஜினிகாந்த் அவர்கள் சொல்லியிருக்கும் கருத்தை நான் வரவேற்கிறேன். அவரது மதிப்பார்ந்த கருத்துக்கு நன்றி. கமலஹாசன் இந்திய நடிகர் சங்கம் என்று மாற்ற வேண்டும் எனச் சொல்லியிருக்கும் கருத்தை நான் மதிக்கிறேன். ஆனால், அதற்கு முன்பு கேரளா, கர்நாடகா, ஆந்திரா போன்ற எல்லா மாநிலங்களிலும் இந்திய நடிகர் சங்கம் என்று பெயர் மாற்றிவிட்டு இந்த நடிகர் சங்கத்தை இந்திய நடிகர் சங்கமென்றோ அல்லது அகில உலக நடிகர் சங்கம் என்றோகூட மாற்றிக் கொள்ளட்டும். அதே இந்தியப் பற்றோடு காவிரி, முல்லைப் பெரியாறு, பாலாறு போன்ற ஆற்று நீரை தமிழகத்திற்கு பெற்றுக் கொடுத்துவிட்டால் ரொம்ப மகிழ்ச்சியடைவோம். கேரளாவில், கேரள நடிகர் சங்கம் என்று தனியாக வைத்து கேரள நடிகர்கள் மலையாளிகளாகவே இருப்பர்; ஆந்திராவில், தெலுங்கு நடிகர்கள் தனியாக சங்கம் வைத்து தெலுங்கராகவே இருப்பர்; கர்நாடகத்தில், கன்னட நடிகர்கள் தனியாக சங்கம் வைத்து கன்னடராகவே இருப்பர். நாங்க மட்டும் தென்னிந்தியான்னு வைக்க வேண்டுமா? வேணாம். தமிழ் நடிகர்கள் சங்கமாக மாத்துங்க என்று சொன்னால் இந்தியான்னு வைக்கணும்?

நன்றி: ஒன் இந்தியா

முந்தைய செய்திதென்னிந்திய நடிகர் சங்கத்தின் பெயரை தமிழ்நாடு நடிகர் சங்கம் என பெயர் மாற்ற வேண்டும். தமிழர்கள் தலைமையேற்க வழிசெய்யுங்கள் – செந்தமிழன் சீமான் அறிக்கை.
அடுத்த செய்திவீரமும் தீரமும் அறிவும் கொண்ட தமிழ் பெண்களின் சாட்சியாக விளங்கியவர் தமிழினி – சீமான் இரங்கல்