இலங்கை மீதான பொதுநலவாய் மாநாடுகளின் விசாரணை: கொலைகாரனே விசாரணையா? -சீமான் கேள்வி

16

 

இலங்கை மீதான போர்க்குற்ற விசாரணை குறித்த கேள்விக்கு பதிளித்த நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் சீமான் கூறியதாவது:

இலங்கையின் மீது தலையீடற்ற ஒரு பன்னாட்டு விசாரணையைத்தான் சர்வதேசச் சமூகத்திடம் நாம் கோருகிறோம். ஆனால், பொதுநலவாய் அமைப்பிலுள்ள நாடுகள்தான் இலங்கை மீது போர்க்குற்ற விசாரணையைச் செய்யும் என்கிறார்கள். பொதுநலவாய் அமைப்பின் தலைவராகவே இலங்கை இருக்கிறபோது அந்த அமைப்பிலுள்ள நாடுகள் இலங்கையை எப்படி குற்றப்படுத்தும்? இந்த விசாரணை எப்படி நேர்மையாக  இருக்கும்? என்ற கேள்வி நமக்கு எழுகிறது. கொலைசெய்த கொலைகாரனே விசாரணையின்போது கூடவே இருந்து விசாரிப்பான் என்றால், அந்த விசாரணை எப்படி நீதியைப் பெற்றுத் தரும்?