கடலூர் மாவட்டம் சார்பாக பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி 27-07-15 அன்று கடலூரில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் தலைமை ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் சீமான் அவர்கள் கலந்துகொண்டு எழுச்சியுரையாற்றினார்.
ஆர்ப்பாட்டக் கோரிக்கைகள் பின்வருமாறு:
1) கடலூர் மீன்பிடி துறைமுக முகத்துவாரத்தை ஆழப்படுத்தி தூண்டில் முள்வளைவு அமைத்திட வேண்டும்.
2) கடலூரில் உயிரிழந்த மீனவர் குடும்பங்களுக்கு எந்த நிபந்தனையுமின்றி ரூ.5 இலட்சம் உடனடியாக நிவாரணம் வழங்க வேண்டும்.
3)கடலூர் கெடிலம் ஆற்றின் நீர் வளத்தையும், நிலவளத்தையும் நாசப்படுத்தும் நெல்லிக்குப்பம் EID பாரி சர்க்கரை ஆளைக் கழிவை அப்புறப்படுத்த வேண்டும்.
4)பெரியப்பட்டில் சாய தொழிற்சாலையை நிறுவி விவசாய நிலத்தையும், நீர் வளத்தையும், கடல் வளத்தையும் கூட்டாக அழிக்கும் SIMA சாயத்தொழிற்சாலையை தடைசெய்யக்கோரியும்
5)நெல்லிக்குப்பம் நகர பகுதியில் திருக்குளம், பனந்தோப்பு, ஆரோக்கியசாமி தெரு, ரகுமான் நகர் ஆகிய மக்கள் வசிக்கும் பகுதியின் நடுவில் நகராட்சி குப்பைகள் கொட்டுவதை தடுத்து, குப்பைகளை அகற்ற வேண்டும்.